தனிமையில் ஓர் பின்னிரவுப் பொழுது . . .

ஊசியாய்
ஏறிடும்
மிக மெல்லிய போதை,
மழை  ஊறி
சுவாசம் சில்லிடும் 
குளிர் இரவு  ,
பேரமைதி  நிரம்பிய  சாலையில்
மாநகரத்து  ராஜாவாய்
தன்னந்தனியே  வீறிட்டு பயணிக்கும்
வாகனம் ,
நிறைவான 
இன்பம் யாதென
இதயம் உணரும் வேளையில் ,
பூத கணங்களின்
வரவேற்பாய்
எதிரே
மாநகர காவல் வாகனம் !!~
~ Pk

Comments