Aug 16, 2014

இந்த இனமும் இன மக்களும் நாசமாய் போகட்டும் : பகுதி - 1

இதை எப்படி துவங்குவது என்றே தெரியவில்லை. வலைப்பூவில் எழுதி சரியாக இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. கருத்தில் எழுத்தில்  தடுமாற்றம் வருமா என்றெல்லாம் நான் சிந்திக்கப்போவதில்லை.

என்ன இருந்தாலும் எழுத வேண்டிய அழுத்தமான அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

உப்பு சப்பில்லா இப்பதிவின்  மூலம் கூட நான் சீமானின் நெடுநாள் எதிரி , பல நாள் வன்மம் என்றெல்லாம் உடனே என் மீது மண்களும் கற்களும் வீசப்படக்கூடும்.
பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.
அவரின் அந்தரங்க கதையவா நான் விவாதிக்க போகிறேன் ???
என் இன நன்மைக்காக போராடும் ஒருவன் தவறு செய்யும்போது கண்டிப்பதும், விமர்சிப்பதும் மிகக்கொடுமையான குற்றமென்றால் நான் என் இனத்திற்காக குற்றவாளியாக இருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
சீமானைப்பத்தி தவறாக பேசியபொழுது எத்தனை எத்தனை  திராவிட இயக்கத்தவர் மீது , உடன்பிறப்புகள் மீது இதே கற்களையும் மண்ணையும் நான் வீசியிருப்பேன்.


ஆனாலும்,
சீமானை நான் விமர்சிப்பதால் தமிழ் தேசிய கொள்கைக்கு எதிரானவன் என்றோ, சீமான் - நாம் தமிழர் கட்சியை இவ்வளவு நாள் நான் வெறுத்து வந்தேன் என்றோ தமிழ் தேசிய கொள்கை தவறானது என்பது போன்ற கணிப்புகள் இதைப்படிக்கும் பொது நிலையினருக்கு வந்து விடக்கூடாது என்ற விடயத்தில் உறுதியுடன் இருக்கிறேன்.

ஏற்கனவே கூறியதுதான்......

' புலிப்பார்வை ' மேடையில் சீமான் ஏன் வந்தார் என்ற ஊரே கேட்கும் கேள்வியை நான் கேட்கப்போவதில்லை.

' எது நடந்தாலும் சீமானை ஏன் கேள்வி கேட்க வேண்டும் ???
சீமானை மட்டும் ஏன் கேட்க வேண்டும் ???
சீமான் மட்டுமே இவர்களின் குறி ' என்பது போன்ற கருத்துகள் நாம் தமிழர் தம்பிகள் , அண்ணன்கள் வாயிலாக வெகு வேகமாக பரப்பப்பட்டு வருகின்றன.

அவர்களுக்கு ஒரு கேள்வி ,


ஈழப்படுகொலைகளுக்கு ஏன் கருணாநிதியை திட்ட வேண்டும் ???

வேறொன்றுமில்லை.
கருணாநிதி ஒரு துரோகி. நம்பிக்கை துரோகி. இனத்தின் நம்பிக்கை துரோகி.
எல்லாம் செய்யக்கூடிய இடத்தில் அவர் இருந்தாலும் ஏதும் செய்யாமல் அமைதியாய் இருந்தால் ,  எல்லாம் முடிந்து  அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கையை அவரே உடைத்துதெறிந்து தன் இன மக்களை ஏமாற்றியதால் அவரை இன்று வரை கேள்விக் கேட்கிறோம்.
எந்த அறிக்கை விட்டாலும் எதிர்த்து பேசுகிறோம்.
துரோகி என்று திட்டுகிறோம்.

மேலே குண்டு எழுத்துகளில் இருப்பவைதான் இங்கேயும் பொருந்தும்.
ஏன் சீமானை இச்சம்பவத்திற்காக திட்டுகிறோம் ???
ஏன் சீமானை மட்டும் திட்ட வேண்டும் ???

முதலில் விமர்சிப்பவர்கள் எல்லாருமே சீமானின் எதிரிகள் என்ற கண்ணாடியை தம்பிகள் கழட்ட வேண்டும்.

பதில் வேறொன்றுமில்லை .
அவர்  மேடையில் அமர்ந்திருக்க , அவரின் கண் முன்னாலேயே எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் தாக்கப்பட்டார்கள்.
உடனே  திரைப்படத்தில் வருவது போன்று மேடையிலிருந்து குதித்து கையை முறுக்கி அங்கிருப்பவர்களை தூக்கி வீச சொல்லவில்லை.
மாறாக , அவர் ஒன்றும் செய்யவில்லை என்பதே இங்கே அதிர்ச்சியும் அவமானமும் கலந்த கடுங்கோபமாக உருவெடுத்திருக்கிறது.

நான் ஏன் சீமானைப்பற்றி பேச வேண்டும் ????
சீமானுக்கும் எனக்கு என்ன தொடர்பு ????
அறிமுகம் உண்டா ????
அவர் எங்களுக்கு செய்தது என்ன , நாங்கள் அவருக்கு செய்தது என்ன ???

நான் அக்கட்சியில் இல்லை என்பது மட்டுமே பதில். மற்றபடி இவையெல்லாம் உடன் இருக்கும் என் அருமை நண்பர்களுக்கு தெரியும் என்பதால் வளர்த்த நல்ல பாம்பு நஞ்சு கொட்டிய கதையை விடுத்து அந்த ஆற்றாமையால் மற்ற விடயங்களை சொல்ல இருக்கிறேன்.

கடந்த வாரம் கூட சீமான் வந்திருந்த கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு சென்றிருந்தேன். ' உங்க தலைவர் வந்திருக்கார் . போகல ??? ' என்று நண்பர்கள் கூட இழுத்து சென்றார்கள். புகைப்படமெல்லாம் எடுத்து இனுசுட்டாகிராமில் பெருமை பொங்க போட்டிருந்தேன்.

 



மனம் ஆற மறுக்கிறது.


' புலிப்பார்வை ' க்கு சீமான் ஆதரவா இல்லையா , நிகழ்வுகளில் கலந்துக் கொண்டாரா இல்லையா என்று தெரியாது என்று கூறியிருந்தேன்.
அதுவும் இங்கே அனாவசியம் தான். பெரும்பான்மை தமிழ் பற்றாளர்கள் எதிர்க்கும் இப்படத்தின் நிகழ்வில் கலந்து கொள்ளும் முன் குறைந்தது அவரின் நிலைப்பாட்டையாவது தெரிவித்துவிட்டு சென்றிருக்கலாம்.
எதுவுமே இல்லாமல் வெகு சாதாரணமாக அமர்ந்திருந்தது கொடுமை.

அதை விட இவர் புலிப்பார்வைக்கும் ஆதரவு , கத்திக்கும் ஆதரவு என்பது போன்று இவரின் கடந்த சில நாட்களின் செய்கைகள் அமைந்திருந்தன.
பேசுபுக்கிலும் கிழிக்கப்பட்டது.
எல்லாவற்றையும் பூசி மெழுகினோம்.

இதெற்கெல்லாம் முன்னோட்டமா என்றெல்லாம் தெரியாது ,
கீழ்காணும் இவரின் பேட்டி இச்செயல்களின் விடையாக அமைந்துவிட்டதாக அவதானிக்கப்பட்டது.

http://youtu.be/v77Yc5Ndme4

இரு தொழிற்முதலாளிகள் நடுவில் நடைபெறும் விடயம் என்று எளிதாக கூறும் சீமான் , ' புலிப்பார்வை ' யும் அது போல ஒன்றுதான் என்று விட்டுவிடுவார் என நினைக்கிறேன்.
அதே போல் மாணவர்கள் குறித்தும் தவறான கருத்துகள்.

மேடையில் சீமான் அமர்ந்திருக்கிறார். ஒலி வாங்கியில் சீமானை ஒருவர் வரவேற்றுக்கொண்டிருக்கிறார். அப்பொழுது மேடைக்கு எதிரில் எதிர்ப்பு குரலுடன் வரும் மாணவர்கள் இனம் மானம் வீரம் விடுதலை குறித்து பேசும் சீமான் கண் முன்னாலேயே அடித்து இழுக்கப்படுகின்றனர்.
மேடை நாகரீகம் கருதியோ வேற வழி இன்றியோ அமைதியாக அமர்ந்திருக்கிறார் நம் செந்தமிழன். 

' புலிப்பார்வை ' இசை வெளியீட்டு விழாவில் தாக்கப்பட்ட எம் தமிழ் தம்பிகள்

https://www.youtube.com/watch?v=l9dQsi2ZaTc


தமிழினப் பற்று , தமிழ் தேசிய விடுதலையைப் பற்றி பேசும் ஒரு தமிழ் கட்சியின் தலைவர் முன்பே மாணவர்கள் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அடித்து துவைக்கப்பட்டு இழுத்து செல்லப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள்.
அந்த ஒரு நொடியில் அவர் மீதிருந்த மிகப்பெரிய மரியாதையும் நம்பிக்கையும் உடைந்து சரிந்தது.

எல்லாம் முடிந்ததும் நாம் தமிழர் தோழர்கள் அவர்கள் மீது அடி விழாமல் தடுத்தார்கள் என்ற பேச்சு வேறு.

நாம் தமிழர்கள் குண்டர்கள் என்றார்கள்.
அப்படியா ???

நாம் தமிழர் கட்சியில் குண்டர்கள் இல்லையா ???
நான் கண்டவரை இல்லை.

அருமையான பாசமிகு அண்ணன்களும், அருமையான இனப்பற்றுடன் அடுத்த தலைமுறையினர் இருக்கிறார்கள்.
நான் கண்ட இடத்தை தவிர.

புதுவையில் இவர்கள் கட்சி துவங்கினார்கள்.
அருமையாக ஒரு வேலை நிறுத்தத்தை நடத்திக்காட்டினார்கள்.

அதன் பின்வந்த சில காலக்கட்டத்தில் துவங்கியது வினை.

பலர்  கட்சியிலிருந்து பிரியத்துவங்கினார்கள்.

இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா என்றால் புதிதாக வந்த ஆட்களை பார்க்கணுமே ....

கட்சியின் புது வரவு ' பாலா ' என்பவர். பல தற்கால நாம் தமிழர் சுவரொட்டிகளில் சிரித்துக்கொண்டிருப்பார்.
இவரின் உள்ளூர் பெயர் ' நொள்ள பாலா '.
போராளி என்றதும் என்ன செய்வோம் ???
அவரின் கடந்த கால போராட்ட வரலாறை பார்ப்போம்.

இவர்தான் பாலா ...

 
அடுத்து,
சீமான் ' கண்டாலே அஞ்சும் சிறந்த வீரன் ' என்று அரியாங்குப்பம் தொகுதி கட்சி அலுவலக திறப்பு விழாவில் பேசிய நபரின் வரலாற்றை பார்ப்போமா ???

பிப். 15, 2010
வாகன சோதனை: ரவுடி கைது
 
ஏப்ரல் 05, 2011
வீச்சரிவாளுடன் திரிந்த பிரபல ரவுடி கைது

பிப். 04 ., 2012
மாமூல் தர மறுத்த கடைக்காரருக்கு கத்தி வெட்டு

மார்ச்சு 23, 2012
புதுவையில் மீண்டும் நடைமுறைக்கு வந்தது குண்டர் தடுப்புச் சட்டம்

இது போதாதென்று சில வாரங்களுக்கு முன்பு புதுவையில் உள்ள ஒரு காவல் நிலைய நாம் தமிழர் முற்றுகையின் போது தானாகவே வந்து சிக்கிய குற்றவாளியை காவல் நிலையத்திற்கு அள்ளி எடுத்து சென்ற செய்தியை நீங்கள் புதுவை நாம் தமிழர் கட்சி தோழர்களிடமோ , புதுவையை சேர்ந்த ஊடகவியலாளர்களிடமோ உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

இது வெறும் கொஞ்சூண்டு காக்கா கடி எடுத்துக்காட்டுதான்.
இன்னும் பல எதிர்காலத்தில் வரலாம்.

இப்படிப்பட்ட வரலாற்றை கொண்ட நாம் தமிழர் கட்சியின் சில நிகழ்வுகளைப் பற்றி விமர்சித்தால் நான் இவர்கள் எதிரி. ஏன் சீமான் இப்படி பேசினார் ??? என்றால் நான் இவர்கள் விரோதி. 

கண்ணுக்கெதிரே தம் பிள்ளைகள் அடிபடும்போது காப்பாற்றாதவரா தன் இனத்தை காப்பாற்ற போகிறார் ???? அதைப்பற்றி கண்டனம் தெரிவிக்கலாமே என்று கூட நான் கேட்கப்போவதில்லை.
வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் கூட அறிக்கை வெளியிட்டு விட்டார்.





இவர்  விடுவாரா ? விட்டாலும் பேச்சு பேச்சா மட்டுமே இருக்கும். மாணவர்களோடு போட்டி போட முடியாமல் இன உணர்வில் தோற்கிறார் என நினைக்கிறேன்.

தோழர்களே ,
நாம் தலைவர்கள் பின்னால் நிற்பது இனத்துக்காக மட்டுமேயன்றி தலைவர்களுக்காக அல்ல.
இதனைப் புரிந்துக்கொள்ளாவிட்டால் நீங்கள் வெறும் அவர்களின் அல்லக்கைகள் மட்டுமே.

நாம்  தமிழர் இயக்கமாக இருந்தபோது சீமானைப் பற்றி பேசுகையில்  மதுரையிலிருக்கும் அண்ணன் அடிக்கடி சொல்லுவார் ' அடேய் .... ரொம்ப உழைக்கிறீங்க. ஓட்டு கேட்டு போனப்ப மூஞ்சில கோடு போட்டானுங்க. அடி பின்னியெடுத்தாங்க. வாங்கிட்டு வந்தேன். இப்ப இப்படி மாறிட்டாங்க. பாத்து இருந்துக்கடா ' என்று அடிக்கொருமுறை சொல்லுவார்.
கேட்டமா ???
கேப்போமா ??
உரைத்தது உறைக்குமா ???

இப்ப நடக்குதுல்ல. இனி எங்கிட்டு போயி மூஞ்சிய வச்சிக்க.


 '  புலி பார்வை ' இசை வெளியீட்டு விழாவில் சீமான் பேசிய பேச்சு சற்றும் சளைத்ததல்ல...

https://www.youtube.com/watch?v=PEokCsZ1bPc

ஆனால் ,
வெறும் பேச்சு மட்டுமே தமிழின விடுதலைக்குஉதவாதென்று இனி விழித்தெழு தமிழா ......


வாழ்த்துகள் ....


வீரமாக நேர்மையாக துணிவோடு எவரையும் நம்பாமல் தலைவர் பாதையில் தன்னிச்சையாக போராடிய எம் பிள்ளைகளுக்கு....

பேரன்புடன் ,
எழிலன் !

( பி.கு. : எழுத்துப்பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க. தமிழ் வாழ்க !! )

No comments:

Post a Comment

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.