Jun 26, 2012

கோவிந்தா போட்டா தமிழ் வளருமா ?! - சிறப்பு டமில் சர்ச்சை

சில மாதம் இருக்கும் ...

வார விடுமுறை
வழமை போல பயலுக கூட்டிட்டி எங்கியாவது திரையரங்கிற்கு போலாமென அழைத்தேன் ,
மாசக் கடைசியென்பதால் ஒவ்வொருத்தனும் எடுக்க தயங்கினான்
மச்சி காசு செலவு என்னது என்றதும் ஒவ்வொரு செல்பேசி அழைப்பாக வரத்துவங்கின ,
எங்கடா முக்கியமான அந்த நாலு பேர காணோம் ?!
அவனுகளா , அவிங்க ஏதோ கோவில சுத்தம் பண்றேன்னு கிளம்பி போயிருக்கானுங்க ?
கோவிலையா ? அதுக்கும் அவனுங்களுக்கும் என்னடா சம்பந்தம் ?????? சற்றே அதிர்ச்சியுடன் நான்,

அட மாமு , ஏதோ பழமைய காப்பாத்தறேன்னு ஒரு தோழர் பேஸ்புக்ல பதிவிட்டிருந்தார் , அதான் துணைக்கு கிளம்பி போயிருக்கானுங்க . எப்ப வருவாங்கன்னு தெரியல . நாம வேணா போவோமா ?? என்றான்

' அடங்குனியா .... கோவில சுத்தம் பண்ண என்னிய கூப்படறியா ?! ' என்றபடி செல்பேசியை அணைத்தேன் .

சில நாள் கழிந்திருக்கும் ...

அனைவரையும்  நேரே சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது ,
' ஆமா  மச்சி  ஏதோ புனரமைப்பு பணி பத்தி சொன்னியே என்னாச்சு? ' என்றேன்.

' எங்க ஏதுன்னு விவரம் கேட்டேன் , பதிலே வரல . அதான் போகல ' என்றான்

சரி  சரி விசயத்துக்கு வா என்றேன்

பேஸ்புக்கில் சில நண்பர்கள் சொல்லியிருந்தார்கள் அவங்க பண்றத பார்த்தா தமிழ் தொன்மையை பாதுகாக்கிற மாதிரி தெரியல . இதைப் பற்றி கேள்வி கேட்ட சில தோழர்களை அநாகரீகமா அர்ச்சித்த சம்பவமும் நடந்திருக்கிறது .
இனி இது போல் பேசினால் விரல்களை வெட்டி விடுவேன் என்று வேற ஒரு வீர பராக்கிரமசாலி மிரட்டியிருந்தார் ( கோப்புகளை காட்டினான் )

சரி நமக்கெதுக்குவம்பு , அவனுங்கள வேற போய் நோண்டிக்கிட்டு

இல்ல  மச்சி , முதல்ல தமிழ்ன்னதும் நம்ப பசங்க போனாய்ங்க . வேலை செஞ்சாங்க . ஆனா பேஸ்புக்ல பாரேன் , அந்த புகைப்படத்துக்கு எத்தன பேரு அரோகரா போடறாங்கன்னு .......

சரிடா ஏதோ பண்ணிட்டு  போறாங்க . இப்ப அதுக்கு என்ன ??

பிறகு தான் உறைத்தது .......

இந்த விடயம் பல நாளாகவே நடந்து வருகிறது . ஆளாளுக்கு தமிழ் சேவை ஆத்தறேன் பேர்வழி என்று தலைமை தாங்க துடிக்கிறார்கள் . வாங்கடா இணைந்து செய்வோம் என்றால் யோசிக்கிறார்கள்.

 மெய்யாலுமே தமிழ் தொண்டாற்ற ஏன்யா கோவிலை சுத்தம் பண்ணனும் என்றால் பழமையை காக்கிறார்கள் என்றான் என் நண்பன் .

சரி
அவனைத்  திருத்த சில சந்தர்ப்பம் கொடுத்துப் பார்ப்போம் என்று ,
மனசாட்சிய தொட்டு சொல்லு ,
அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறவர்கள் எல்லாருமே பழமையை காக்க தான் உதவுகிறார்களா என்ற இன்னொரு தோழனின் கேள்விக்கு கொஞ்ச நேரம் விழிப்புக்கு பிறகு , அதை இதன் பொறுப்பாளர் கிட்ட தான் கேட்கணும் மச்சான் என்றான் .





நமக்கெதுக்குங்க வம்பு என்றபடி உடனிருந்த நண்பன் சரக்கடிக்க விண்ணப்பம் வைத்தான்.
அதை விட இது விறுவிறுப்பாக இருந்ததில் இன்னும் கவனம் செலுத்தப்பட்டது ......

அவர்களின் நோக்கத்தையும் , பழமையை காக்கும் உழைப்பையும் நான் குறை சொல்லவில்லை . ஆனால் , அதை சரியாக செய்யாமல் குடிநீரோடு சாக்கடையையும் கலந்து அளிக்கும் வேலையை ஏன் இப்படி செய்கிறார்கள் என்பதே கேள்விக்குறி ....

கோவிலை சோழர் காலத்தை சேர்ந்தது என்றால் , என் நண்பன் ஆதாரம் கேட்கிறான் ., அது நிச்சயம் இருக்கும் ..

  • தொல்லியல் துறை மேற்பார்வையில்லாமல் எப்படி பணிகள் நடைபெறுகிறது எனத் தெரியவில்லை .  ஒரு வேளை ஏதேனும் கல்வெட்டு கிடைத்து உடைந்தால் யார் பொறுப்பு ???

சரி அது கூட விடுங்கள் ,


  • பேஸ்புக்கில் , கோவில் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவரும் திருப்பணி என்ற மனநிலையோடு ஈடுபடுவது இல்லை என உறுதியாக சொல்ல முடியுமா ???   பேஸ்புக்கில் கோவில் படங்களில் ' அரோகரா  ' போடுவதில் இருந்தே நிரூபணமாகிறது ...
( ஆதாரம் : அவர்களின் பின்னூட்டங்கள் )


இதை ஆதாரத்துடன் மெய்ப்பிப்பது தேவையற்ற என்ற காரணத்தால் , தோழர்கள் மேற்கொண்டு இதில் கவனம் செலுத்த விரும்பவில்லை ..


எருதா , யானையா ???  ( நன்றி : தோழர்:சசிதரன் )


  • மத சாயத்தில் தமிழ் கறைப்பட்டுவிடக்கூடாது என்ற மிகுந்த அக்கறையிலேயே இப்பதிவு எழுதப்பட்டுள்ளது . நீங்கள் இந்து சாமியாராக கூட இருங்கள் , ஆனால் தமிழென்று வரும்போது உடன் உங்கள் மதத்தையும் இணைக்காமலிருப்பது உத்தமம்.

  • சுத்தம் செய்யப்படும் இந்த கோவில் கும்பாபிசேகம் செய்யப்படாமல் இருக்குமா ?? தமிழனுக்கு ஏது கும்பாபிசேகம் ( குடமுழுக்கு ) ??? அப்பொழுது அது மதம் சார்ந்தது தானே ??? தமிழனின் பெருமை அங்கே எங்கே நிற்கிறது ???


  • தனியே தமிழ் வாரிசாக முயற்சிக்கிறார் போலும் . வாழ்த்துக்கள் .
    ஏற்கனவே தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த தோழர்களை மறைமுகமாக காழ்ப்புணர்ச்சியுடன் நிலைச்செய்தி போட்டு , தங்களது நண்பர்களை விட்டு திட்ட வைக்க வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை . பழமையை காக்க வேண்டிய தோழர்கள் , தங்கள் தமிழ் பண்பாட்டை காற்றில் விட்டது விந்தை ...

  • இதில் பாராட்டத்தக்கது இவர்களின் உழைப்பு . ஒரு சிதைந்த சரித்திரத்தை மீட்டெடுக்கும் அரிய முயற்சி . வாழ்த்துக்கள் . நாங்கள் இல்லாவிட்டாலும் இப்பணி நிறைவடையும் எனத் தெரியும் ..
ஆனால்  ,

தமிழ்ப் பணி என்று மனசாட்சியை ஏமாற்றிக்கொண்டு இணைந்து செயல்பட விருப்பமில்லை .. வெறும் வாய் சம்பம் என்று உங்கள் தோழர்களை விட்டு திட்டசொன்னாலும் , இதை விவாதமாக்கினாலும் மகிழ்ச்சியே ...

இதில் இன்னும் நிறைய மாற்றுக் கருத்துகள் இருக்கிறது . இதை ஒரு விளம்பரம் என்றும் சொல்ல முடியும் . கோவிலை சீரமைக்கிறேன் என்று புதுவை சட்டமன்ற உறுப்பினரை அழைத்து வந்தார்களா , இல்லை அவர் தமிழ்ப் பணியாற்ற வந்தாரா என அவர்களுக்கே வெளிச்சம். காரணம் அன்னாரின் சொந்த மாநிலத்திலேயே நிறைய வரலாற்று விடயங்கள் மண்ணுக்குள் மறந்து கிடக்கின்றன.

தமிழை சுயநலத்துக்காக பயன்படுத்தும் எவராயினும் , என் எதிர்ப்பு வலிந்து வந்து நிற்கும் . அதற்காக நாங்கள் இன்னதை சாதித்தோம் என சொல்லவேண்டிய அவசியமில்லை . உங்கள் வியாபாரத்தை தொடருங்கள் . காலம் மெய்ப்பிக்கும் .. நாங்கள் ஒரு நாள் சாதித்துவிட்டு பிறகு நேரே பேசிக்கொள்கிறோம் :)


இன்னொரு கூத்து ,

உலக தமிழ் மக்கள் இயக்கம் னு ஒரு பேஸ்புக் குழுமம்..

அவனுங்க  தமிழ் வளர்க்கிற இலட்சணத்த பாருங்க ....




மகரிசி வழங்கும் டமில் அருளாசி ....



சமசுகிருதம்  வளர்க்கிறார்கள் .....




 முருகர்ர்ர்ர்ர்ர் தமிழ் வளர்க்கிறார் .....





பெரியார் , குன்றக்குடி அடிகளார் காலில்விழுந்ததாக இந்த பொய்யும் புரட்டும் பேசும் பக்கம் மறைமுகமாக ஆத்திகத்திற்கு சாதகமாக பேசுகிறது .
இது அவர்கள் சொன்னது ....
அடுத்தது தான் உண்மை ........


பெரியார்  அவர்களின்உதவியாளராக இருந்த ஐயா தன் கைப்பட எழுதி அனுப்பிய கடிதம் ....


 




 பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு 

- பாவேந்தர் 


- களையெடுத்தல் தொடரும்

3 comments:

  1. இந்த மாறி ஒரு குரூப் இருக்குறதே தெரியுமா இருந்துட்டேன் ... மொள்ளமாரி பசங்க .. என்னா பீலா விடுதுங்க ... தூக்கி போட்டு அல்லையில நாலு மிதி மிதிச்சா சாணி வந்துடும்

    ReplyDelete
  2. சரியான பதிவு! கோவிந்தா போட்டு தமிழ் வளர்க்க முடியாது - அவாள் தொப்பையைத் தான் வளர்க்க முடியும். தமிழன் என்பதையும் இந்து மத அடையாளத்தையும் போட்டுக் குழப்பி, மத வசப்படுத்தும் சூழ்ச்சி நீண்டநாட்களாக நடக்கிறது.

    pseudo scientific மூடத்தனத்தையும், பண்பாட்டு மீட்சி என்ற பெயரில் மதத்தையும் வளர்க்கும் முயற்சி போலவே தெரிகிறது.

    ReplyDelete
  3. ஹரி கிருஷ்ணாJuly 05, 2012

    அருமையான பதிவு நண்பரே....அவனுங்களை பொடனியில் தான் அடிக்கணும்

    ReplyDelete

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.