Jan 2, 2012

தந்தானே தன தந் ' தானே ' : இசையல்ல இம்சை


மஞ்சள் , சந்தனம் ...







ஒண்ணுமில்லீங்க நல்ல விடயம் சொல்ல போறேன் .
அதான் மங்களகரமா ஆரம்பிக்கலாம்னு ..........

' தானே ' விலிருந்து தப்பி வந்த ஒரு சீவன் பேசுகிறேன் ...


இருபத்து ஒன்பதாம் தேதி காலை எழும்பினோம் .
பல்லைக் காட்டி இளித்துக்கொண்டிருந்தது மார்கழி மாத சூரியன் .

' மச்சான் கணக்கில் பணம் போட்டாச்சாம் ' - என்ற அருமையான இனிமையான

வார்த்தையை எழுந்ததும் செய்தியாய் சொன்னான் நண்பன் .
நல்ல சகுனம் என்றெண்ணியபடி ,
' என்னடா ஆப்பி நியூ இயர் வருது . இப்படி குண்டு சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டினா

எப்படி ' என்று ஆரம்பித்தேன்
' போ மச்சான் , ஏதோ செலவு வைக்க முடிவு பண்ணிட்ட ! ' என்றபடி இழுத்து

போர்த்திக்கொண்டான் ஒருவன் .
' வழமை போல் ( இப்படி பேச அவரு புலவர் இல்ல , ஆங்கிலத்திலிருந்து

மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது ! ) கடற்கரையா ?? வேற வேலை இல்ல ' தேநீர் பருக

கிளம்பிவிட்டான் இன்னொருவன் .
' பொழப்ப பாக்கோணும் ' சொல்லியபடி குளியலறைக்குள் வேகமாக நுழைந்தான்

மற்றொருவன் .
' ம்ம்ம்ம் .......... மேல சொல்லு '
அந்த அருமையான வார்த்தையை கேட்டு .
நம்ப கருத்தையும் ஆர்வமா கேட்கும் அந்த சீவனை குரல் வந்த திசையில் தேடினேன் 



' இங்க சமிஞ்ஞை சரியா கிடைக்கல , மொட்டை மாடிக்கு வாரன்...  தள்ரா ' என்றபடி

மாடிக்கு என்னை ஒதுக்கி எழும்பி போனான் இறுதியாய் இருந்த ஒருவன் .

க்க்க்க்க்க்க்கி கிக்கீ கிகிகீ...

எவனோ விசிலடிக்கிறான் என்று ஆசுவாசமாய் படுக்க போனவனை , ' ஏன்டா எவ்வளவு

நேரமாடா அவன் மணியழுத்துவான் ? வெங்காயம் தக்காளி வந்திருக்கான் கதவ தொர

! ' என்று மாடியிலிருந்த  ' தொர  ' கட்டளையிட்டுவிட்டு மீண்டும் மலையேறினார் .

' என்றா இவ்வளவு நேரம் திறக்க ? '
' வேலையா இருந்தேன் சொல்லு ! '

' உன் நல்ல நேரம் . அந்த கடற்கரை விடுதியில் அறை கிடைச்சிடுச்சு '
.
.
.

.
.
.
என்ன புள்ளியா இருக்குன்னு பாக்கறீங்களா ?! சில நொடிகள் மகிழ்ச்சியோ

அதிர்ச்சியோ தெரியவில்லை . ஒரே நிசப்தம் நிலவியது ( இருந்தது இரண்டே

பேருதான் என்பது வேற விடயம் ! )

நான் சொன்னா நம்ப மாட்டானுங்க நீயே சொல்லிடு என்றேன் .

' எங்க இருக்கு பெருசு ? '

மாடியில செல்பேசி ஆராய்ச்சியில் இருக்கான் . இங்கிருந்தே சொல்லு , கிட்ட போனா

கடுப்பாயிடுவான்

' டேய் செம்மறியாட்டு மண்டையா ! விடுதியில் அறை கெடச்சிடுச்சு . ஈருந்தா இல்ல

பேருந்து முன்பதிவு செய்யவா ?!?! '

மச்சான் ! பரீட்சையில் நாம எல்லாரும் தேர்ச்சி ன்னு சொல்லியிருந்தா கூட இப்படி

ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்காது !!

போர்வை போர்த்தியிருந்த உடலுக்கு சட்டென்று உயிர் வந்தது .  ஆச்சரியம் கலந்த

விழிகளுடன் அருகில் வந்து நின்றது .

குளியலறையின் கதவு சட்டென்று திறந்துக் கொண்டது . சித்தர் பாதி , புத்தர் பாதி

கணக்காய் மகிழ்ச்சியுடன் இன்னொருவன் .

கையால் இறங்கி வந்தா கூட இவ்வளவு வேகமா வந்திருக்க முடியாது . ' பெருசு '

வாம்மா மின்னலு கணக்காய் வந்துவிட்டது .

தேநீர் குடிக்க போனவனுக்கு சிறப்பு செய்தி போயிருக்க வேண்டும் . அழைப்பு

வந்திருந்தது .

' என்னடா சொல்ற ?! '

' ஆமா மச்சான் காலையில தான் செய்தி வந்தது செல்பேசிக்கு '

' காசுதான் கொடுக்கலியே அப்புறம் எப்படி ? ' சந்தேகக் கண்ணோடு கேள்வி

துவங்கியது

' நம்பளையும் மதிச்சு கூப்பிடறாங்க இல்ல , போவணுமா இல்லையா ?! ' கொதித்தான்

செய்தியுடன் வந்தவன் .

' சரிடா சொக்கா !அங்க வசதியெல்லாம் ? '

' எல்லாம் தயாரா இருக்கு முதல்ல கெளம்பு ! '

' அப்போ சரி பொட்டிய கட்டறோம் , ஊர்ல போய் குதிக்கறோம்  '

' அதுக்கு முன்னாடி அலுவலகத்துல விடுமுறை சொல்லியாச்சா ? '

' அது கெடக்கு கழுத . என்றா பசுபதி  கட்ரா  வண்டிய ! '

அதற்கு பிறகு என் பேச்சுக்கு பதில் வருமென நான் காத்திருப்பது வீண் என

தோன்றியது .

இறுதியாய் ஒரு கேள்வி ,

' எல்லாம் சரி , எப்படி போறது ? '

' வானந்தான் வா வா ன்னு சொல்லுதுல , ஈருந்துதான் ! '

தங்களுக்குரிய வாகனத்தை முடிவு செய்து கொண்டார்கள் .

பெட்டிகள் கட்டப்பட்டன , துணிகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டன .
வாசனைத்திரவிய குப்பிகளும் , செல்பேசி மின் திறன் வழங்கியும் இடத்தை

தக்கவைத்துக் கொண்டன .

அவனவன் ' புயல் ' வேகத்தில் கிளம்பினான்

அவரவர் ஈருந்தை  கிளப்பினோம் .
<photo id="1" />
அதென்னமோ தெரியவில்லை , பெருசுவின் வாகனம் அன்று அப்படி அடம்பிடித்தது .

' சரிடா ! நான் பேருந்துல வந்திடறேன் . ஒண்ணும் பிரச்சினையில்ல . அங்க போயி

அச்சுவோட வண்டிய எடுத்துக்கறேன்  '

அனைவரும் ஆமோத்திவிட்டு எங்க பாட்டுக்கு கிளம்பி விட்டோம் .

பெருசும் , இரவியும் பேருந்தில் ...

அப்ப கூட எங்க ஆறாம் அறிவுக்கு புரியல .

வழியில் ஒருத்தன் சொன்னான் ' மச்சான் இப்படித்தான் ஒரு மன்னர் போருக்கு

கிளம்பும்போது குதிரை முரண்டு புடிச்சதாம் . அந்த போர்ல மன்னர் இறந்துட்டாராம் ...

'

முதல்ல வண்டியிலிருந்து கீழ இறங்கு ,
கதை சொன்னவனை அனைவரும் மொத்தி எடுத்தோம் ... ' படுவா , ஊருக்கு வர வரை

வாயே தொறக்க கூடாது ! '

' பரீட்சை பார்க்கர்ல தான் எழுதுன . அப்படியே எல்லாத்திலேயும் முதல் நிலை

வாங்கிட்டாரு . அம்பது பைசா ஊற்றேழுதியில பரீட்சை எழுதி பாசான நாயெல்லாம்

பேசுது ' கவுண்டர் முறையில் அவனை கவனித்து விட்டு மறுபடியும் கிளம்பினோம்  ...

புதுச்சேரி சில நூறு கி.மீ . என வரவேற்றது ஒரு பதாகை

பின்னணியில் ' வாங்க பசங்களா மாட்னீங்களா ' என்பதை வாய்க்குள் மறைத்து ,
புன்சிரிப்புடன் எங்களை பார்த்துக்கொண்டிருந்தது சூரியன் .  .  .




தொடரும் ...


( அருஞ்சொற்பொருள் : ஈருந்து - மோட்டார் சைக்கிள் , பேருந்து - பஸ் , சமிஞ்ஞை - சிக்னல் , எழுதுகோல் - பேனா )


2 comments:

  1. இயல்பு தமிழில் அதுவும்
    சுத்த தமிழில்
    நல்ல அனுபவப்பகிர்வு.,

    ReplyDelete
  2. சிரித்த சூரியன் -அர்த்தம் என்ன?
    வெயிட்டிங்:-)

    ReplyDelete

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.