Jan 9, 2012

35 வது புத்தக கண்காட்சி 2012 - ஒரு ' சிறப்பு ' பார்வை






(  இப்பதிவு , தோழர்.கார்த்திகேயன் அவர்களின் பதிவான : 35 வது புத்தக கண்காட்சி 2012 - ஒரு பார்வை 
- என்பதின்  ' பிசாசுக்குட்டி பதிப்பு 1.0  ' ஆகும் . இது மாத்தி யோசி இலக்கிய வைகையை சார்ந்ததாகும்  )


சென்னையில் 35வது புத்தக கண்காட்சி புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய பள்ளியில் அருமையாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .
ஞாயிறன்று பார்வையிட்ட இந்த கண்காட்சியை பற்றிய கட்டுரை இது

பள்ளியின் வாசலில் நுழைந்தால் இரு மருங்கிலும் அவரவர் தங்கள் பதிப்பகங்கள் பற்றிய விளம்பரங்களை வழிநெடுகிலும் வைத்துள்ளார்கள் . அவற்றிலேயே தங்கள் பதிப்பகங்களில் கிடைக்கும் சிறப்பான நூல்கள் மற்றும் கண்காட்சியில் அவர்களின் கடை எண்களையும் குறித்துள்ளார்கள் . அதிலேயே உங்களுக்கு பிடித்தமான நூல்கள் இருந்தால் , அவற்றையும் கடை எண்ணையும்  குறித்து வைத்துகொண்டு உள்ளே செல்லலாம் . இல்லாவிட்டால் வெளியே இருக்கும் மேடையின் பந்தலில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிக்கலாம் .
உள்ளே சிறிதுதூரம் சென்றதும் இடதுபுறமாக உங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கியுள்ளார்கள் அங்கே சென்று வாகனத்தை விட்டுவிட்டு அதற்கான சீட்டையும் பெற்றுக்கொள்ளவேண்டும். மறக்காமல் வாகனத்தை பூட்டி விட்டீர்களா என்பதை நன்கு சோதித்துக் கொள்ளவும் வேண்டும் . இல்லாவிட்டால் உங்கள் வண்டி ஏதேனும் ஒரு திருடருக்கு பெரிய பரிசாக சிக்கிவிடும் வாய்ப்பிருக்கிறது .
பின்பு மீண்டும் பாதையை தொடர்ந்து உள்ளே சென்றால் சிறிது தூரத்தில் இடப்புறமாக ஒரு மேடையும் அதன் கீழ் பல இருக்கைகளும் இருக்கின்றன. புத்தக கண்காட்சியில் பிரபலங்களின் மேடைப் பேச்சுக்கான ஏற்பாடு இது. பொதுவாக மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் இந்த பகுதியில் நேற்று மாலை ஏகப்பட்ட கூட்டம் இருந்தது காரணம் என்னவெனில் அப்துல்கலாம் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததுதான் . ஆனால் ஒலிபெருக்கி கருவிகள் துல்லியம் இல்லாமலும் சத்தம் சரியான அளவில் கேட்க இயலாததாகவும் இருந்தது.
மேலும் , அங்கே நம்மைப் போல் சில அறிஞர்கள் ஆங்காங்கே அமர்ந்து விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை காணலாம் . ' அப்துல் கலாம் வருகிறாரா ? அப்படியா ? ' என்று கேட்ட எங்களைப் போன்ற ஆசாமிகளும் அங்கே இருக்க வாய்ப்புகளுண்டு . ஆர்வத்துடன் அக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள முயற்சித்தால் அடிதடியே மிஞ்சும் என்பதால் தொடர்ந்து முன்னேறவும் .

Jan 2, 2012

தந்தானே தன தந் ' தானே ' : இசையல்ல இம்சை


மஞ்சள் , சந்தனம் ...







ஒண்ணுமில்லீங்க நல்ல விடயம் சொல்ல போறேன் .
அதான் மங்களகரமா ஆரம்பிக்கலாம்னு ..........

' தானே ' விலிருந்து தப்பி வந்த ஒரு சீவன் பேசுகிறேன் ...


இருபத்து ஒன்பதாம் தேதி காலை எழும்பினோம் .
பல்லைக் காட்டி இளித்துக்கொண்டிருந்தது மார்கழி மாத சூரியன் .

' மச்சான் கணக்கில் பணம் போட்டாச்சாம் ' - என்ற அருமையான இனிமையான

வார்த்தையை எழுந்ததும் செய்தியாய் சொன்னான் நண்பன் .
நல்ல சகுனம் என்றெண்ணியபடி ,
' என்னடா ஆப்பி நியூ இயர் வருது . இப்படி குண்டு சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டினா

எப்படி ' என்று ஆரம்பித்தேன்
' போ மச்சான் , ஏதோ செலவு வைக்க முடிவு பண்ணிட்ட ! ' என்றபடி இழுத்து

போர்த்திக்கொண்டான் ஒருவன் .
' வழமை போல் ( இப்படி பேச அவரு புலவர் இல்ல , ஆங்கிலத்திலிருந்து

மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது ! ) கடற்கரையா ?? வேற வேலை இல்ல ' தேநீர் பருக

கிளம்பிவிட்டான் இன்னொருவன் .
' பொழப்ப பாக்கோணும் ' சொல்லியபடி குளியலறைக்குள் வேகமாக நுழைந்தான்

மற்றொருவன் .
' ம்ம்ம்ம் .......... மேல சொல்லு '
அந்த அருமையான வார்த்தையை கேட்டு .
நம்ப கருத்தையும் ஆர்வமா கேட்கும் அந்த சீவனை குரல் வந்த திசையில் தேடினேன்