Aug 16, 2012

கதை கதையாம் காரணமாம்

எனக்கு தெரிஞ்ச அலுவலகத்துல ஒரு துறை மேலதிகாரி இருந்தார்.
ஆண் பெண் பேதமில்லாமல் எல்லா ஊழியர்களிடமும் நகைச்சுவையாக , அருமையாக பேசுவார். எனக்கு நல்ல நண்பர் .
அவருக்கு கீழே வேலை செய்யும் ஒரு பெண் அவரை ஒரு தலையாக தீவிரமாக காதலிப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் எங்களிடம் தெரிவித்தது. அந்தப்பெண் குடும்பத்துக்காக உழைத்துக்கொண்டிருப்பதாகவும் , காதல் கீதல் என்றால் அந்த பெண் வாழ்க்கை சீரழியும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதிகாரிக்கோ சில மாதங்களில் பரியம்.

Jul 5, 2012

போடா ! இரசினியே எங்க பக்கம் இருக்கார்என் அடி மனதில் எப்போதுமே ஒரு நடிகனின் இரசிகன் மெல்லமாய் உறங்கிக்கொண்டிருக்கிறான். 
கருத்து அறியாத வயதில் 
தன் வயதையொத்த எல்லா பாலர்களைப் போலவே 
இவனும் திரிந்திருக்கலாம் . 

விரல் சூப்புவதற்கு பதிலாக விரல்காட்டி சவால் விட்டிருக்கலாம் . பெற்றோர் , உற்றோர் சாட்சியன்றி நாம் எதையும் உறுதிப்படுத்த முடியாது .
ஆனால் , நானோ அப்படித்தான் நான் திரிந்தேன்
ஆட்காட்டி விரல் காட்டி மிரட்டியிருக்கிறேன் ,
சவால் விட்டிருக்கிறேன்
ஆனால் . எந்த நடிகனும் என்னை கவர்ந்ததே இல்லை .
 ' எம் புள்ள இரசினி  இரசிகன் ' என என் பாலக நண்பர்களின் பெற்றோர் சிலாகித்து சொல்லும்போது கூட ....

Jun 26, 2012

கோவிந்தா போட்டா தமிழ் வளருமா ?! - சிறப்பு டமில் சர்ச்சை

சில மாதம் இருக்கும் ...

வார விடுமுறை
வழமை போல பயலுக கூட்டிட்டி எங்கியாவது திரையரங்கிற்கு போலாமென அழைத்தேன் ,
மாசக் கடைசியென்பதால் ஒவ்வொருத்தனும் எடுக்க தயங்கினான்
மச்சி காசு செலவு என்னது என்றதும் ஒவ்வொரு செல்பேசி அழைப்பாக வரத்துவங்கின ,
எங்கடா முக்கியமான அந்த நாலு பேர காணோம் ?!
அவனுகளா , அவிங்க ஏதோ கோவில சுத்தம் பண்றேன்னு கிளம்பி போயிருக்கானுங்க ?
கோவிலையா ? அதுக்கும் அவனுங்களுக்கும் என்னடா சம்பந்தம் ?????? சற்றே அதிர்ச்சியுடன் நான்,

Mar 31, 2012

இனி வரும் காலம் . . .

ஒரு இயக்கத்தின் சீரான வளர்ச்சி , சிறப்பான எதிர்காலம் என்பது அந்தந்த இயக்கத்தின் அடுத்த தலைமுறையின் கொள்கை பிடிப்பு , இயக்க கோட்பாட்டில் சரியாக இயங்குதல் , எண்ணிக்கை ( இரண்டாம் பட்சம் தான் ! ) ஆகியனவற்றை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படுகிறது .
 
http://tnsec.tn.nic.in/symbols/recognised%20party.jpg
அந்த வகையில் பார்த்தால் அடுத்த தலைமுறை தி மு க ஆதிகால திராவிட இயக்கத்தின் துளி சாயல் கூட இல்லாத முட்டாள் இளையோர்களால் நிரப்பப்பட்டிருக்கும் . கொள்கை என்றால் என்னன்னே தெரியாம பலர் இருக்காங்க . அசோக் என்ற அருமை நண்பர் ( பதிவர் அசோக் அல்ல ) தி மு க மொழிப் பற்றில் துளிக் கூட இல்லாமல் , திமுக கொள்கை  என்னவென்று தெரியாமல் தமிழ் வழிக் கல்விக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் , கேட்டால் தி மு க கட்சியாம் , கருணாநிதி தமிழின தலைவராம் . அண்ணே , கொள்கை என்றால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிரொலிக்கோணும்  இதை தான் நான் பல தடவை வலியுறுத்திக் கூறி வந்தேன் . நான் அமெரிக்காவில் வாழ்கிறேன் , நான் பல ஆண்களுடன் சுத்துவேன் , ஆனால் நான் தமிழச்சி என்பது எப்படி முரண் வாக்கியமோ அப்படித்தான் உங்கள் முட்டாள் ஈன செயலும் :)


* திராவிட இயக்க முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு சென்றிருந்த பொழுது அப்பகுதி இயக்கத்தின் தலைவர் மகன்தான் இளைஞர் குழு தலைவர் , மற்ற இயக்கத்தவரின் பிள்ளைகள் ( இரண்டு மூன்று ) இளைஞர் அணியினர் . ஆக மொத்தத்தில் எதிர்காலம் என்பது சந்தேகமே !!!


* தேமுதிக , பாமக போன்ற கட்சிகள் வழமையான ஆட் சேர்ப்பு வேலைகளில் ஈடுபட்டு கட்சியினை தொழில் போல நடத்தி வந்துவிடும் என்பதால் அவைகள் இதில் சேர்த்தி இல்லை.


* அதிமுக இளைஞர்களுக்கு அதன் கொள்கைகளை மூத்தோர்கள் நிச்சயம் படிப்பிக்க வேண்டும் . திராவிட கருத்துக்களோ , எண்ணமோ , பகுத்தறிவு சிந்தனைகளோ துளியும் இல்லை .


* மதிமுக - வேற்றுமை மறந்த இனப் பற்றாள இளைய தலைமுறையால் நிரப்பட்டிருக்கிறது . அவர்கள் கட்சி கொள்கையை விட இன , மொழி பற்றை அதிகம் விதைக்கிறார்கள் . இக்கால இளைஞர்கள் அரசியலை வெறுப்பவர்கள் , உயர் பதவியில் , தமிழகம் தாண்டிய மாநிலங்களில் இருப்பவர்கள் கூட விரும்பி இணைகின்றனர் அல்லது உடன் சேர்ந்து இயங்குவதை கண்டிருக்கிறேன் . மற்ற கட்சியினர் விமர்சனத்தை கண்டு வெறுப்படைவது என்பது கிடையவே கிடையாது !!!


* நாம் தமிழர் - அருமையான துவக்கம் . இயக்கமாக இருந்தபோதும் சரி ,கட்சியாக மாறிய போதும் சரி ... இளைஞர்கள் ஆர்வத்துடன் இணைந்தனர் . உணர்வோடு பெரும்பான்மையானோர் மறைமுகமாக தோள் கொடுத்தனர் . கட்சி துவக்க விழாவிற்கு 500 மைல் தொலைவிலிருந்துக் கூட நண்பர்கள் சென்றனர் .
அமெரிக்கா முதலிய நாடுகளில் கூட எனது  தோழர்கள்  ஆதரவாக இருந்தனர் . ஆனால் இன்றோ வெகு சிலரைத் தவிர குழம்பிய மனதோடு கூடிய இளைஞர்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது . விலைமதிக்க முடியாத இளைஞர் சக்தியை பாழ்படுத்தி விட்டார் . இதை சரிப்படுத்தினால் மட்டுமே ஒரு நல்ல எதிர்காலம் கொண்ட கட்சியாக நிலைநிறுத்த முடியும் . அதிலும் முக்கியமாக தன்னைவிட அரசியலிலும் , இன உணர்விலும் மேன்பட்ட வைகோ போன்றோரை தமது வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளாமல் , அவரை சீண்டும் , ஏளனமாய் பேசும் கட்சியினரை கண்டும் காணாமல் விடுவது மகா முட்டாள்தனம் . நம்மை அழிக்கும் எதிரிக்கும் மிக எளிதான விடயம் .

* மார்க்சிச்டு - மாணவர் இயக்கம் , வாலிபர் சங்கம் ன்னு உயிர்ப்போடு வருங்காலத்திற்காக தெளிவாக இருக்கும் இயக்கம் . பெரும்பாலும் ஏழை மாணவர்களை மட்டுமே கண்டதுண்டு மிஞ்சிப்போனால் நவீன கால கம்யூனிச்டுகள் இருப்பார்கள் . தெளிவானவர்களை கண்டுப்பிடிப்பது மகா கடினம் . கொள்கை நிலைப்பாடு என்றால் கண்ணு மண்ணு தெரியாமல் ஆதரிக்கும் தோழர்கள் உண்டு . பாகிச்தான் நமது நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் . நிச்சயம்மின்சாரம் அளிப்பது தப்பு இல்லை என்ற நிலைப்பாட்டை இந்நேரம் முடிவு செய்து இருப்பார்கள் . அந்த கால காம்ரேடுகளில் காணப்பட்ட நேர்மை , உறுதி , துணிவு இல்லை . 


* பெரியார் திராவிட கழகம் - கடவுள் மறுப்போடுஅறிவில் தெளிவான இளைஞர்களை கண்ட இயக்கம் . சாதி மறுப்பு என்று போராட கிளம்பினால் என்ன ஏதென்று கேட்காமல் உடன் வர இளைஞர் பலம் உண்டு . ஈழப் போராத்தின் போது தனியார் கணினி நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த சில தோழர்கள் கூட விடுமுறை கொடுத்து விட்டு வந்து இரயில் மறியல் போராட்டத்தில் உணர்வோடு ஈடுபட்டதை  கண்டிருக்கிறேன் . மூளைச்சலவை செய்து சேர்க்கப்பட்டதாக இதுவரை யாரையும் கண்டதில்லை . சிறப்பான இளைஞர் சக்தி கொண்ட இயக்கம் . சீமான் நாம் தமிழர் இயக்கம் துவக்கி அரசு அவரை புதுவை சிறையில் வைத்த போது கொள்கைகளை கண்டுக்கொள்ளாமல் ஒரு இன உணர்வாளராக அவர்களுக்கு கடும் கெடுபிடிகளை தாண்டி உணவு  கொண்டு போனது பெ தி க  இளைஞர்களே . இதை நிச்சயம் நாம் தமிழர் இயக்க நண்பர்கள் வைகோ வை கண்ணு மண்ணு தெரியாமல் எதிர்ப்பதற்கு முன் உணர வேண்டும் . உத்வேகத்துடன் விவேகானந்தர் கூறிய இளைஞர்கள் உள்ள தூய உணர்வுள்ள தமிழக புலிகள் இயக்கம்  . இன்னும் கற்பித்தல் தேவைப்படுகிறது இளைஞர்களுக்கு .


... கருத்து மோதல்களை கருதி மற்ற அமைப்புகளை பற்றி விவாதிக்க விரும்பவில்லை , வேறெதுவும் நினைவிலில்லை . அனைத்தும் எனது அனுபவத்தின் வாயிலாகவே பதியப்பட்டது . 
இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் , விடுபட்டத்தைப் பற்றிய  கேள்விகளையும்  பின்னூட்டமிடுங்கள் அல்லது பிசாசுக் குட்டி பகுதியில் தெரிவியுங்கள் .

அம்புடன் ,
பிசாசுக் குட்டி ~

Jan 9, 2012

35 வது புத்தக கண்காட்சி 2012 - ஒரு ' சிறப்பு ' பார்வை


(  இப்பதிவு , தோழர்.கார்த்திகேயன் அவர்களின் பதிவான : 35 வது புத்தக கண்காட்சி 2012 - ஒரு பார்வை 
- என்பதின்  ' பிசாசுக்குட்டி பதிப்பு 1.0  ' ஆகும் . இது மாத்தி யோசி இலக்கிய வைகையை சார்ந்ததாகும்  )


சென்னையில் 35வது புத்தக கண்காட்சி புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய பள்ளியில் அருமையாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .
ஞாயிறன்று பார்வையிட்ட இந்த கண்காட்சியை பற்றிய கட்டுரை இது

பள்ளியின் வாசலில் நுழைந்தால் இரு மருங்கிலும் அவரவர் தங்கள் பதிப்பகங்கள் பற்றிய விளம்பரங்களை வழிநெடுகிலும் வைத்துள்ளார்கள் . அவற்றிலேயே தங்கள் பதிப்பகங்களில் கிடைக்கும் சிறப்பான நூல்கள் மற்றும் கண்காட்சியில் அவர்களின் கடை எண்களையும் குறித்துள்ளார்கள் . அதிலேயே உங்களுக்கு பிடித்தமான நூல்கள் இருந்தால் , அவற்றையும் கடை எண்ணையும்  குறித்து வைத்துகொண்டு உள்ளே செல்லலாம் . இல்லாவிட்டால் வெளியே இருக்கும் மேடையின் பந்தலில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிக்கலாம் .
உள்ளே சிறிதுதூரம் சென்றதும் இடதுபுறமாக உங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கியுள்ளார்கள் அங்கே சென்று வாகனத்தை விட்டுவிட்டு அதற்கான சீட்டையும் பெற்றுக்கொள்ளவேண்டும். மறக்காமல் வாகனத்தை பூட்டி விட்டீர்களா என்பதை நன்கு சோதித்துக் கொள்ளவும் வேண்டும் . இல்லாவிட்டால் உங்கள் வண்டி ஏதேனும் ஒரு திருடருக்கு பெரிய பரிசாக சிக்கிவிடும் வாய்ப்பிருக்கிறது .
பின்பு மீண்டும் பாதையை தொடர்ந்து உள்ளே சென்றால் சிறிது தூரத்தில் இடப்புறமாக ஒரு மேடையும் அதன் கீழ் பல இருக்கைகளும் இருக்கின்றன. புத்தக கண்காட்சியில் பிரபலங்களின் மேடைப் பேச்சுக்கான ஏற்பாடு இது. பொதுவாக மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் இந்த பகுதியில் நேற்று மாலை ஏகப்பட்ட கூட்டம் இருந்தது காரணம் என்னவெனில் அப்துல்கலாம் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததுதான் . ஆனால் ஒலிபெருக்கி கருவிகள் துல்லியம் இல்லாமலும் சத்தம் சரியான அளவில் கேட்க இயலாததாகவும் இருந்தது.
மேலும் , அங்கே நம்மைப் போல் சில அறிஞர்கள் ஆங்காங்கே அமர்ந்து விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை காணலாம் . ' அப்துல் கலாம் வருகிறாரா ? அப்படியா ? ' என்று கேட்ட எங்களைப் போன்ற ஆசாமிகளும் அங்கே இருக்க வாய்ப்புகளுண்டு . ஆர்வத்துடன் அக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள முயற்சித்தால் அடிதடியே மிஞ்சும் என்பதால் தொடர்ந்து முன்னேறவும் .

Jan 2, 2012

தந்தானே தன தந் ' தானே ' : இசையல்ல இம்சை


மஞ்சள் , சந்தனம் ...ஒண்ணுமில்லீங்க நல்ல விடயம் சொல்ல போறேன் .
அதான் மங்களகரமா ஆரம்பிக்கலாம்னு ..........

' தானே ' விலிருந்து தப்பி வந்த ஒரு சீவன் பேசுகிறேன் ...


இருபத்து ஒன்பதாம் தேதி காலை எழும்பினோம் .
பல்லைக் காட்டி இளித்துக்கொண்டிருந்தது மார்கழி மாத சூரியன் .

' மச்சான் கணக்கில் பணம் போட்டாச்சாம் ' - என்ற அருமையான இனிமையான

வார்த்தையை எழுந்ததும் செய்தியாய் சொன்னான் நண்பன் .
நல்ல சகுனம் என்றெண்ணியபடி ,
' என்னடா ஆப்பி நியூ இயர் வருது . இப்படி குண்டு சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டினா

எப்படி ' என்று ஆரம்பித்தேன்
' போ மச்சான் , ஏதோ செலவு வைக்க முடிவு பண்ணிட்ட ! ' என்றபடி இழுத்து

போர்த்திக்கொண்டான் ஒருவன் .
' வழமை போல் ( இப்படி பேச அவரு புலவர் இல்ல , ஆங்கிலத்திலிருந்து

மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது ! ) கடற்கரையா ?? வேற வேலை இல்ல ' தேநீர் பருக

கிளம்பிவிட்டான் இன்னொருவன் .
' பொழப்ப பாக்கோணும் ' சொல்லியபடி குளியலறைக்குள் வேகமாக நுழைந்தான்

மற்றொருவன் .
' ம்ம்ம்ம் .......... மேல சொல்லு '
அந்த அருமையான வார்த்தையை கேட்டு .
நம்ப கருத்தையும் ஆர்வமா கேட்கும் அந்த சீவனை குரல் வந்த திசையில் தேடினேன்