செய்திதாட்களில் வருவதைப் போல ' கதை ' சொன்னால் அதன் உண்மையான கருத்து புரியாமல் போகலாம் என்பதால் , இப்படி துவக்குகிறேன் . . .
இதை கதையாக படித்தாலும் சரி , ஒரு செய்தியாக படித்தாலும் சரி , முடிவு வாசகருடையதே . எப்போதோ நடைப்பெற்ற ஒரு சம்பவம் . இப்படி நடந்தால் நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள் ! ஆளை தேடி உங்கள் நேரத்தை விரயமாக்கி கொள்ள வேண்டாம் .
வெகு நாட்களாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு முகநூல் கணக்கிற்கு ஒரு ' பெரியவர் ' நட்புக் கரம் நீட்டி இருந்தார் . கவனமின்மையால் சில நாட்களாக நட்புக் கரத்தை ஏற்றுக் கொள்ள இயலவில்லை .
பிறிதொரு நாளில் ஏதேச்சையாக காணும்போது ஒரு சகோதரிக்கும் , அவர் தோழிக்கும் முகநூல் நண்பர் என்பது தெரிந்தது . நட்புக் கரத்தை ஏற்றுக் கொள்ளும்படி செய்தி அனுப்பியிருந்தார் . சகோதரியின் நண்பர் என்பதால் ஏற்றுக் கொண்டார்.
அதன் பிறகு அவரை கவனிக்கவேயில்லை .
சில நாட்கள் கழித்திருக்கும் முன்னிரவில் அக்காவிடமிருந்து குறுஞ்செய்தி .
அதாவது அந்த நபர் இரட்டை அர்த்தங்களுடன் செய்தி அனுப்பியிருந்தார் . அந்த சகோதரி திட்டித் தீர்க்காமல் தைரியமாய் எதிர்கொண்டிருக்கிறார் . . .
பயந்து போன அந்த நைந்த ஓநாயானது ' உங்களோடைய இந்த அணுகுமுறை எனக்கு பிடித்திருக்கிறது ' என்று பாராட்டு பத்திரம் வாசித்து தப்பி ஓடியிருக்கிறது .
' தமக்கையும் ' வயசு கோளாறினால் பேசிவிட்டார் என்று எண்ணி மன்னித்து விட்டிருக்கிறார் .
இச்சம்பவங்களிலிருந்து ஒரு வாரம் கழித்து ,
அந்த தமக்கையின் தோழிக்கும் , மற்றுமொரு தமக்கைக்கும் இதே போல் இரட்டை அர்த்த செய்திகளை அனுப்பியிருந்தாராம் . முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த தமக்கையின் கைப்பேசி எண்ணிற்கும் செய்திகளும் அழைப்பும் வந்த வண்ணமிருந்தனவாம் . ஏதோ தவறான எண் என்று அவரும் கண்டும் காணமல் விட்டிருந்தார் . அடுத்து வந்த நாட்களில் தான் துவங்கியது வில்லங்கம் . என் சகோதரி முகநூலை கைப்பேசி ஊடாக பயன்படுத்துவதால் அதன் எண் அவர் கணக்கில் வெளிப்பட்டிருக்கிறது . அதையும் அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை . ஒரு நாள் ஏதேச்சையாக கைபேசியை எடுத்து பார்த்த அத்தான் கடுப்பாகி அது யாரென்று விசாரித்தார் .
பிறகு அந்த ' புண்ணியவானுக்கு ' அழைத்து ' அழைக்காதீர் ' என ' பக்குவமாய் ' கூறிய பிறகு ,
வழக்கம் போல் ' இந்த அப்ரோச்சும் எனக்கு பிடிச்சிருக்கு ' என்று ' மியாவ் ' என்று கத்தியபடி ஓடிவிட்டது .
இப்படிப்பட்ட ' தூசுகள் ' சில நேரங்களில் கண்களை உறுத்துமே தவிர கால ஓட்டத்தில் அழிந்து போய்விடும் . இல்லையெனில் அழிக்கப்பட வேண்டிய கடமையும் கட்டாயமும் ஏற்படும் .
இது ஒரு சாதாரண நிகழ்ச்சியாக கூட எடுத்துக் கொள்ளலாம் ஆனால் , கண்ணுக்கு தெரியாமல் எத்தனை பேரோ ???!! அவர்கள் வீட்டில் இதனால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டதோ !!!
இதுப் போன்ற ' ஆட்கள் ' இருப்பது பிரச்சனையாக நமக்கு தெரியாது ஆனால் பாதிப்பு ?????! பாதிப்பின் அளவு ????!!
இளம் மற்றும் திருமணமான பெண்களை ஆண்களும் சமுதாயமும் கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம் . அதிலும் , நடுத்தர மற்றும் கிராமப் புறத்தை அடிப்படையாக கொண்ட பெண்களை இன்னும் அடக்கி வைத்திருக்கிறோம் .
அதை விட அவர்கள் கணவன் பேச்சுக்கு அடங்கிப் போய் இருக்கிறார்கள் .
அவர்களில் எத்தனையோ திறமைசாலிகளும் அடக்கம் . ஏற்கனவே அவர்களுக்கு இவ்வளவு துன்பம் இருக்கும் போது இதில் இந்த ஓநாய்களை போன்று பெருந்துன்பங்கள் வேறு !!!
' ஆண்களின் ஆளுமை ' இப்படியொரு கொடூர முகமாகி நீள்வது பெண்கள் மட்டுமின்றி அவர்தம் சமூகத்தையும் நிச்சயம் பாதிக்கும் . அவர்களது திறமையை , வெளிக்காட்டும் உரிமையும் சுதந்திரமும் பறிபோகும் . அதற்கான சூழ்நிலைகளை நாமே ஏற்படுத்தி தருகிறோம் என்பதே வருத்தத்திற்குரிய விடயம். இவ்வாறான ஆட்களினால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் அச்சப்படாமால் நேரடியாக அவர்களை தோலுரிக்க வேண்டும் இல்லையென்றால் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் மூலம் உண்மையை வெளிக் கொணர வேண்டும் . இல்லையென்றால் , இவ்விஷச் செடிகள் தழைத்தோங்கி வளர்ந்து விடுவார்கள் !!!
மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு பிரச்சினை வரும் , தங்கள் எதிர்காலம் பாதிக்கும் என்னும் காரணமற்ற அச்சங்களினாலேயே இவ்வாறான பல விடயங்கள் வெளிவருவதில்லை வந்தாலும் இவர்கள் ஒத்துழைக்காதது இவ்வாறான ஆண்களுக்கு மகா சாதகமாகி போகின்றது .
' குற்றம் சுமத்திய அந்த பெண் நடத்தைக் கெட்டவள் ' என்று தவறு செய்யும் ஆண்களும் மிக எளிதாக பழியை மாற்றி சுமத்தி தப்பித்துக் கொள்கின்றனர் . தன்னைப் போல வேறெந்த பெண்ணும் பாதிக்கப் படக்கூடாது என்று நினைப்பார்களேயானால் ஆதாரங்கள் கொடுக்க இயலாவிட்டாலும் நடந்த சம்பவங்களை பெயர் அடையாளங்களின்றி பகிர்ந்துக் கொள்ள வேண்டும் .
ஒரு பெண்ணை நட்பு ரீதியாகவோ , பாலியல் ரீதியாகவோ அல்லது வேறெந்த காரணத்திற்காகவோ அணுகுவது ஆண் மனித இயல்பு , மற்றவரை பாதிக்காத வரை ஒருவரின் தனிப்பட்ட விடயம் . ஆனால் , வற்புறுத்துவதும் , அவருக்கு விருப்பமின்மை , கலாச்சார விழுமியங்கள் , திருமணமானவர் போன்றிருக்கும் பட்சத்தில் அவர்களை அணுகுவது வல்லுறவானது மட்டுமின்றி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் .
நீங்கள் சிந்திக்க தெரிந்தவர் என்பதால் , மேற்கொண்டு சொல்வது தேவையானதன்று என்று எண்ணுகிறேன் .
' ஆண்களும் ' தங்களுக்குரிய சுய உரிமை , தனி மனித சுதந்திரத்தை மற்றவரை பாதிக்காதவாறு செயல்படுத்தினால்
' யாவருக்கும் நலம் பயக்கும் ! '
( பின் குறிப்பு : அந்த மனிதரோ, இந்த மனிதரோ, உள்குத்தோ வெளிகுத்தோ, அதெல்லாம் முக்கியமில்லை, எனக்கு தேவையுமில்லை. ' பதிவின் ' நோக்கம் சம்பந்தப்பட்ட மனிதரை பற்றியது அல்ல . இது ஒரு பொதுப்படையான எச்சரிக்கை . அவ்வளவே !!! யார் மனதையும் புண்படுத்துவன அல்ல . ஒவ்வொருவரும் இதைப் பார்த்து , பெயரோ , அடையாளங்களோ இல்லாத இச்சம்பவத்தை , இது என் கதை , என் சம்பந்தப்பட்ட கதை , என்னை குறிப்பிடுகிறீர்கள் என்று பிராது கூறிக்கொண்டு வந்தால் , வரும்போது சம்பந்தப்பட்ட ' ஆதாரங்களையும் ' எடுத்துக் கொண்டு வரவும் . இச்சம்பவத்தை உணர்ந்து மக்கள் விழித்து கொள்வார்களேயானால் , அதுவே மகிழ்ச்சி ! )
கீழே உங்கள் கருத்திடுங்கள் .
உங்கள் பின்னூட்டத்தை பரிசீலத்த பின்னரே அடுத்த பதிவு வெளிவரும் ! :)
- தோழன் . பி கே .

இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2012/01/blog-post_24.html