Sep 26, 2011

அட டாக்டர்களா . . .

' முற்பகல் நேரம் ' ( பொதிகை சேனல்ல அப்படித் தான் சொல்லுவாங்க ! )
' அரசாங்க ஆஸ்பத்திரி ' க்கு போவதென்றால் , 
சில மணி நேரம் செயற்குழு கூட்டி மன்மோகன்ஜி 2G யைப் பற்றி சிந்திப்பது போல நாட்கணக்கில் யோசிப்பது வழக்கம் ...!

நேத்து  ரொம்ப நேரமா பேஸ்புக்கியதால் சாப்பிடவும் மறந்து , பின்னிரவில் வெள்ளைக்காரன் ரேஞ்சுக்கு ( பிரெட் ) கோதுமை ரொட்டியில் ( பிரெஞ்ச் சீஸ் ) பிரெஞ்சு பாலாடைக்கட்டியை ( பிடிச்சது பழைய சோறுங்கிறது வேற விஷயம் ) பரப்பி விட்டு சத்தம்போடாமல் குப்புற படுத்தாயிற்று !


குளிர் காற்று திடீரென்று வாட்டியதால் கைகளை கட்டிக்கொண்டு ( வாத்தியாரை பார்த்ததும் இஸ்கூல்ல கைகட்டுவமே அதே ஸ்டைலில் ) மீண்டும் குப்புற படுத்துவிட்டேன் ) .

இது தான் ' வினை ' .
அதிகாலையில்  எழும்போது வலது கை, தோள்பட்டையில்  ( மெலிதாக ) லைட்டா ( அத ஏன் மறச்சிக்கிட்டு ) ஆரம்பித்த வலி நேரம் ஆக ஆக கொஞ்சம் ( வலுவாக ) ஹெவியாக துவங்கியது !!!


இதுக்கு மேல இதனிடம் மல்லுக் கட்ட முடியாதென்பதால் , ' சரித்திர புகழ் ' வாய்ந்த அந்நிகழ்வை மேற்கொள்ள தீர்மானித்தேன் !
ஆம் ,
' அரசாங்க மருத்துவமனைக்கு ' செல்வதென்று .
சொல்லாமல் கிளம்பினாலும் , சிலருக்கு பதிலளித்தபோது 
' நான் ஏதோ காமெடி ' பண்ணுவதாக நினைத்தனர் .
# மவனுகளா வலி என்னது !!!!

( எல்லாத்துக்கும்  முன்னாடி ஒண்ணு சொல்லிக்கோணும். எங்க ஊர்ல ஐ மீன் ஸ்டேட்ல ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குட்டி அரசாங்க சுகாதார மையம் இருக்கும் , அதற்கு தான் கிளம்பினேன் பொது மருத்துவமனைக்கு அல்ல ! 
இப்படி சிறப்பு வாய்ந்த மாநிலம் எங்கிருக்குன்னு ஆச்சரியப் படாதீங்க , சத்தியமா தா.நா. இல்லை . யூகியுங்கள் ! )


மணி பத்தரையை தாண்டியிருந்ததால் வாசலில் சீட்டு கொடுக்க ஆள் இல்லை , அதனால் நீண்ட கியூவும் ( வரிசையும் ) இல்லை .
நேராக மருத்துவர் அறைக்கு சென்றேன் , வயதானவர்கள் எனக்கு பின்னாடி வந்ததால் வழி விட்டு காத்திருந்தேன் . 
சரி டாக்டர் ( மருத்துவர் ) படு மும்முரமாய் இருப்பார் என்று நினைத்து என் முறை வந்ததும் பம்மி பம்மி போனால் .............................


' காலங்காத்தால, கண்ணம்மாபேட்டை பக்கம் கைலி கட்டிட்டு டீக்கடைல பேப்பர் ( செய்தித்தாள் ) படிக்கிற ' பிளேடு ' மாரி  ரேஞ்சுக்கு உட்கார்ந்து அன்றைய தினசரியை படித்துக் கொண்டிருந்தார் .
அடிக்கடி ' அடஸ்டேஷன் ' அது இதுன்னு போய் வருவதால் ஏதும் சொல்லாமல் ' என்னப்பா ? ' என்றார் .

' டாக்டர் , திடீரென்று வலது பக்கம் பயங்கர வலி ....................... ' ( மேற்கொண்டு  பேச விடாமல் )
' வலது பக்கம் தானே , இடது பக்கம் வலித்தால் தான் பிராப்ளம் ! '
# அப்போ மனுசனோட வலது பக்கம் காலியா இருக்கா ?!?!


' விலாவுக்கு கீழே வலிக்கிறது , வலது கை ரொம்ப குடைச்சல் ' என்று சொன்ன போது மாத்திரை சீட்டின் இறுதிக்கு வந்திருந்தார் அந்த கண்ணாடி போட்ட காண்டாமிருக ( அளவில் ) வைத்தியர் .
# கொய்யாலே , முழுசா சொல்லக் கூட விடல .


அப்பவே , தெரிஞ்சுபோச்சு .
இவர்கிட்டஒரு மணிநேரம் நம்ப பிரச்சனைய சொன்னாலும் அந்த மூணு மாத்திரைக்கு மேல எழுத மாட்டாருன்னு .


இதுல ஒரு கொடுமை என்னானா,
நான் சொல்றத வெச்சு அவராவே ஒரு முடிவுக்கு வந்துட்டார் ,


சரி , இதான் தெரிஞ்ச கதையாச்சேன்னு சீட்ட தூக்கிகிட்டு ( மருந்தகம் ) பார்மசிக்கு போனேன் ,  நம்பூரு டாக்டர் மேல நமக்கு மிக்க நம்பிக்கைகெங்கிறதால , அந்த பார்மசிஸ்ட் ( மருந்தாளுனர் ) கிட்ட ' என்ன மாத்திரை கொடுக்கறீங்கன்னு ' லேசா விசாரிச்சேன் .


ஜிரத்துக்கு ' என்றார் .


வலிக்குதுன்னு போனா ' சொரத்துக்கு ' மாத்திரை கொடுத்த டாக்டர் இன்னொன்னும் சொன்னார் ,
' போய்ட்டு நாளைக்கு வாப்பா ன்னு ' .
( ஏன்னா ,அவர் எழுதிக் கொடுத்தது ஒரு வேளை மாத்திரை தான் . )


 
எல்லாத்தையும் மன்னிச்சிடறேன் ' டாக் ' ( DoC ) ( அதான் டாக்டரின் செல்ல வடிவம் ) , 
ஆனா 
எனக்கு மட்டும் ஒரே ஒரு விடயத்த மறைக்காம சொல்லிடணும் ........#  நோயாளிய தொடாமலேயே அவர்கிட்டயே கதை கேட்டு மருந்து எழுதும் வித்தைய , யார்கிட்ட கத்துக்கிட்டீங்க ??!

6 comments:

 1. இப்போது எந்த டாக்டர் தொட்டு பார்த்து மருந்து தருகின்றனர் அவர்களுக்கு ஏதும் நோய் தொற்றி விடக்கூடாதுன்னு பயந்தில்லையா சாகின்றனர்.

  ReplyDelete
 2. இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாம் சகோ! மேலும் அதிகப்படியான அடைப்புக் குறி விளக்கங்களைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், அருமையான நகைச்சுவை உணர்வுடன் சமூக எள்ளல் தொனிக்க எழுதியிருந்தது அருமை...

  ReplyDelete
 3. // ' விலாவுக்கு கீழே வலிக்கிறது , வலது கை ரொம்ப குடைச்சல் ' என்று சொன்ன போது மாத்திரை சீட்டின் இறுதிக்கு வந்திருந்தார் அந்த கண்ணாடி போட்ட காண்டாமிருக ( அளவில் ) வைத்தியர் .
  # கொய்யாலே , முழுசா சொல்லக் கூட விடல . //

  நிறைய பிரபல மருத்துவர்கள் இப்படித்தான்... தொடர்ந்து நாலு முறை போயிட்டு வந்தா அவர் எது எதுக்கு என்ன மாத்திரை எழுதுராருன்னு கண்டுபிடிச்சு பக்கத்துல நாமளும் ஒரு கிளினிக் வச்சிடலாம்...

  ReplyDelete
 4. //அப்பவே , தெரிஞ்சுபோச்சு .
  இவர்கிட்டஒரு மணிநேரம் நம்ப பிரச்சனைய சொன்னாலும் அந்த மூணு மாத்திரைக்கு மேல எழுத மாட்டாருன்னு .//

  ரொம்ப பேரு இதத்தான் பண்ணிக்கிட்டிருக்காங்க..

  ReplyDelete
 5. சார், இந்த வோர்ட் வெரிபிகேசன தூக்கிடுங்க, ரொம்ப தொல்ல பண்ணுது..

  ReplyDelete

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.