Aug 26, 2011

இதயம் இருப்பவர்கள் மட்டும் இதனை முயற்சி செய்யவும் !!!

அன்பு  உறவுகளே ,
அன்னா ஹசரே '  ஊடக மாயை விட்டு வெளியே வாருங்கள் !!!!
உண்மையான மனித நேயத்தை காட்டுங்கள் !!!!

மறுக்கப்பட்ட நீதியால் செப்டம்பர் ஒன்பதாம் தேதி  தூக்கு மேடை ஏறவிருக்கும் முருகன் , சாந்தன் , பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை நிறுத்தக் கோரி உங்களால் ஆன முயற்சியினை செய்யுங்கள் !!!

- குறைந்த பட்சம் குறுஞ்செய்தியாவது உங்கள் கைப்பேசியில் உள்ள அனைத்து நண்பர்கள் , உறவினர்களுக்கு மாந்த நேயப் பார்வையில் அனுப்புங்கள் . மரண தண்டனைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே எழுச்சியின் தோய்வுக்கு காரணம் !!!!

- உங்கள் பகுதியில் எங்கு மரண தண்டனைக்கெதிரான ஆலோசனைக் கூட்டம், கண்டனப் போராட்டம் நடைபெறுகிறது என தெரிந்துக் கொண்டு உங்கள் நண்பர்களையும் பங்கேற்க
கூறுங்கள் !!!!

- கட்சி , இயக்க பாகுபாடின்றி பங்கேற்று, உங்களால் ஆன மேலான பங்களிப்பை அளியுங்கள் !!!

- உங்களை சுற்றியுள்ள சமூகம்  ,  சுற்றுப்புறம் , மேல்தட்டு மக்களை நினைத்து போராட தயங்குவீர்களேயானால் , குறைந்தது மறைமுகமாகவாவது போராடுபவர்களுக்கு துணிச்சலைக் கொடுங்கள் !!!!! தேவையான உதவிகளை செய்யுங்கள் !!!!!

- உங்கள் அருகிலுள்ள  வாய்ப்புகளை அறிந்துக் கொண்டு அவற்றை திறம்பட பயன்படுத்தி செயல்படுத்துங்கள் .

- புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் , தங்கள் தொடர்பிலுள்ள மரண தண்டனை எதிர்ப்பு இயக்கங்கள் , மனித உரிமை அமைப்புகளை தொடர்புக் கொண்டு இதைப் பற்றி பேச முயலுங்கள் !!!
அருகிலுள்ள இந்திய தூதரகங்களை தொடர்புக் கொண்டு உங்கள் எதிர்ப்பினை பதிவு செய்யுங்கள் !!!
இந்தியா என்னும் ' ஜனநாயக விரோத ' நாட்டில் இருந்துகொண்டு போராட முடியாத எங்களை விட , உங்களால் சிறப்பாக செயல் பட முடியும் என்பதால் உங்கள் உதவியினை நாடுகின்றோம்  !!!

- ராசீவ் கொலையாளிகள் என்னும் தவறான கண்ணோட்டத்தை அகற்றி உண்மையை உணர வையுங்கள் !!!

- கும்பல் கும்பல்களாக அப்பாவி மக்களை சுட்டுக் கொண்ட அஜ்மல் கசாப் பாதுகாப்பாக நீதிக்காக காத்திருக்கும் தேசம் இது !!!

- திருட்டு, கொலை , ஏமாற்றுதல் ஆகியவற்றால் சிறை செல்வதை விட எவ்வளவோ மேலானது
மூன்று உயிர்களுக்காக சிறை செல்வது !!!

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் காணொளி :
http://www.youtube.com/watch?v=SX5w78u45vA )

இது சம்பந்தமாக ஏதேனும் உதவியோ , குறிப்புகளோ உங்களுக்கு தேவைப்படின் ,
எந்நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் !!!
விழ விழ , எழுவோம் !!!!!

~     ' ஜே JaY ReBorN '


Aug 6, 2011

மாமா , மச்சான்


நட்புக்கு கூட கற்புகள் உண்டு
நல்லா தெரிஞ்சுக்கடா!
ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...
அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!


விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க இல்ல
'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!


'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்...
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!
கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!


ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!
பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!
அம்மா ஆசையா போட்ட செயினும்,
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ...
சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!
படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!