Jul 14, 2011

இருபது ரூவா நோட்டு : சில நவீன கால ' கர்ண ' பிரபுக்களின் கதை !!!

அதிகாலை எட்டு மணி . . . (  யூத் டிஷ்னரில அப்படித்தான் இருக்கு ! )
அலாரம் ஒழுங்கா அடிக்குதா ன்னு டெஸ்ட் பண்ண சீக்கிரமே எழுந்து
வெயிட் பண்ணி டயர்ட் ஆகி தூங்கிய என்னை
ஒன்பது மணிக்கு அலாரமே எழுப்பியது !!!
.
அம்மா எங்க இருக்காங்கன்னு ' சாட்டிலைட் ' வெச்சு தேடாத குறையாக
தேடி கண்டுப்பிடித்தேன் ....  அவங்க  கண்களில் அகப்படாமல் தலைமறைவாக !
 .

' சிட்டி ' ரோபோ  வேகத்தில் , அதிரடியாய் சத்தமில்லாமல் கிளம்பி , வெகு நேரமாய் கப்போர்டை துழாவிக் கொண்டிருந்தேன் ( இல்லை இல்லை கிளறிக் கொண்டிருந்தேன் ! )
.
' இதையா தேடுற ' ......... திடீரென்று வந்த குரல் கேட்டு திரும்பினால் ,
தேடிக்கொண்டிருந்த டாக்குமெண்டுகளின் ' நகல்களோடு ' அம்மா !!!
வடிவேலு மாதிரி ' நா அப்படியே ஷாக் ஆகிட்டேன் !!!!! '
.
ஏன்னா .......
காலேஜ் சேர , அப்ளிகேஷன் வாங்கின நேரத்திலிருந்து வீட்டுக்கு தெரியாம எப்படியாவது  சீட் வாங்கியாகணும் என்று முழுக்க முழுக்க கவனமாக நடைபெற்றுக் கொண்டிருந்த   சீக்ரெட் ஆப்பரேஷன் !!!!
சிங்கிள் செகண்டில் புஸ் ஆனது !!!
.
 சரி என்ன செய்ய ..... ' ஹி ஹி ஹி ... காலேஜுக்கு ' என்று லைட்டா ஒரு இளிப்போடு வீட்டிலிருந்து ' எஸ் 'ஆனேன் !!

.
மணி  : 9:17 AM - அவசர அவசரமாக ' VAO ' OFFICE என்றழைக்கப்படும் ' கிராம நிர்வாக அலுவலகத்திற்கு போனேன் !!!
என்ன அருமையான ' நிர்வாகம் ' !
ஒன்பதரை வரை பூட்டியே கிடந்தது !!!!
.
ரசினி பட முதல் நாள் ஷோ மாதிரி ' கர்ணம் ' என்றழைக்கப்படும் விஏஓ வந்ததும் மக்கள் ஏழெட்டு பேர் உள்நுழைந்தனர் !
என் முறை வரும் வரை வரிசையிலேயே பல நிமிடம் காத்திருக்க வேண்டியதாய் போயிற்று !!!
எனக்கு முன்னாடி சென்ற பலரில் நான்கைந்து பேருக்கு அந்த சான்றிதழ் இல்லை , இந்த ஆவணம் இல்லை என்று திருப்பி அனுப்பினார் அந்த ' STRICT OFFICER '.
பார்ரா ........ அரசாங்க நிர்வாகம் அருமையா நடக்குது என்று மூக்கின் மேல் விரல் வைக்கப் போகும் அளவிற்கு வியந்த என் எண்ணத்தில் அரை லோடு மண் அள்ளிப் போட்டார் அந்த ' ஆஆஆபிசர் ! '
.
அவர் கேட்ட கேள்விகளுக்கு பின்னர் அவரை ஏன் ' சார் ' என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது ...
.
அந்த டுபாக்கூர் கேட்டது ,
  • ' எல்லா ஆவணமும் இருக்கா ?! '
Pk : இருக்கு சார் ! பாஸ்போர்ட் , ரேஷன் கார்டு , வோட்டர் ஐடி , முதற் கொண்டு இருக்கு இருப்பிடத்திற்கான சான்று !
( அதிகபட்ச ஆவணமான ' பாஸ்போர்ட் ' இருந்தாலே இருப்பிட சான்று கிடைத்து  விடும் என்ற எளிதான வழி இருப்பதால் ' அது ' அடுத்ததிற்கு தாவியது ! )
.


  • வேறென்ன வேணும் ???!
Pk :  ( கேடுகெட்ட ) சாதி சான்றிதழ் வேணும் !!!

  • இதுக்கு முன்னாடி வாங்கின சான்று எங்க ??!
Pk : இதுக்கு முன்னாடியெல்லாம் வாங்கினதில்ல ! சின்ன வயசில கோவில்ல  கொடுத்த சான்ற வச்சு தான் படிச்சேன் !!!!

  • உன்ன எப்படி ஸ்கூல்ல சேர்த்தாங்க ?!
Pk : ( பிரின்ஸ்பால வேணா கூட்டி வரேன் கேக்கறியா ?! ) ....... அமைதி ! ........,
இது வரைக்கும் எதுவும் கேட்டதிலீங்க சார் ! ( தன்னையறியாமல் பணிவில் 
வந்தது ! )

  • உங்கப்பா எந்த ஊரு ?
Pk : இந்த ஊரு தான் !!!

  • அவரோட ஸ்கூல் Tc எங்க ?!
Pk : ( அவரு படிச்சு முடிச்சே நாப்பது வருஷம் இருக்கும் , அத வெச்சு இது என்ன Improvement எக்ஸாமா எழுத போகுது ? ) அதெல்லாம் கிடைக்காது சார் ! நான் பத்தாங் கிளாஸ் ல இருந்து வாங்கின Tc ல எல்லாம் ஒரே சாதி வகுப்பு தான் சார் போட்டிருக்கு !!!

  • தெல்லாம் ஏத்துக்க முடியாது !!! இதுக்கு முன்னாடி எங்க இருந்த ??
Pk : பக்கத்து ஊரு சார் !

  • இங்க வந்து எத்தனை வருஷம் ஆகுது ?!
Pk : ஏழு வருஷம் சார் !!!

  • எத்தனை வருஷமா அங்க இருந்தீங்க ?!
Pk : பத்து , பதினோரு வருஷத்துக்கும் மேலா சார் !

  • அப்போ . . . அங்க போயி இங்க தான் இத்தனை வருஷமா இருந்தேன்னு சான்று வாங்கிட்டு வா !!!!
Pk : சார் ... அங்கிருந்து எல்லாத்தையும் ' CLEAR ' பண்ணிட்டு
இங்கயே வந்திட்டோம் !! அங்க எங்களுக்கு சான்று எதுவுமில்ல !! பாருங்க ... பாஸ்போர்ட் ல கூட இந்த முகவரி தான் !!!

  • இதெல்லாம் ஏத்துக்க முடியாதுப்பா !!! அப்பாவோட சான்று இருந்தா ஏதாச்சும் எடுத்திட்டு வா !!!!
Pk : தேடிப் பார்க்கிறேன் சார் !!

  • இங்க  இத்தனை ஸ்கூல் இருக்கிறப்போ நீ ஏன்இத்தனை கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற  பக்கத்து டவுன்ல போயி படிச்ச ???!!
( இதை எங்கப்பா கூட கேட்டதில்ல டா **** நான் ஆப்பிரிக்கா வில போய் கூட  படிப்பேன் உனக்கேன் டா ?! )

Pk : சின்ன வயசிலேயே சேர்த்துட்டாங்க  சார் !!!

  • பல வருஷமா அந்த ஊர்ல படிச்சிருக்க .........
Pk : அப்பாவுக்கு பேங்க் மானேஜரா உத்தியோகம் ! அதனால அதான் பக்கமா இருந்தது !!!

  • அப்போ உங்கப்பா பூர்வீகம் என்ன ?!
Pk : அதே ஊரு தான் சார் !!! இதோ பாருங்க அந்தூரு கோவில்ல கொடுத்த சாதி சான்று !!!

  • இதெல்லாம் கணக்கில ஏத்துக்க முடியாது ! நீ போயி முன்ன இருந்த ஊர்ல இத்தனை வருஷமா இங்க தான் இருந்தேன்னு சான்று வாங்கிட்டு  வா !!!
Pk : சார் ....... எனக்கு வோட்டர் ஐடி , ரேஷன் கார்டு எல்லாமே இங்கன்னு ஆகிப் போச்சு சார் !!!

" நீ முதல்ல போயி நான் கேட்டத வாங்கிட்டு வாப்பா ... மத்தத அப்புறம் பார்க்கலாம் ! "
.
( இந்த உரையாடல்களுக்கு நடுவே மூன்று  முறை  வீட்டிற்கு போய் வந்து ஒவ்வொரு முறையும் ஏதாவது புது சான்றுடன் வரிசையில் நின்றேன் .
அம்மாவின் பத்து, பதினைந்து  வருடத்திற்கு முந்திய, முன்பிருந்த ஊரில் வாங்கிய ஓட்டர் ஐடி , அப்பாவிற்கு வாங்கிய சாதி சான்றிதழ் இப்படியாக நான்கைந்து ஆவணங்கள் ! எதற்கும் மசியவில்லை ' அது ' !  )
.

இதற்கு முன்பு நாங்கள் இருந்த ஊரில் வாடகைக்கு இருந்த வீடு தாசில்தாருக்கு சொந்த மானது என்பதால் ,
அவரின்  கைப்பேசி எண்ணை தேடி நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்பு கொண்டேன்  . எனது பால்ய பருவத்தில் இருந்தே என்னை அவருக்கு நன்கு தெரியுமென்பதால் வீட்டில் யாரையும் பேச சொல்லாமல் , உடனே வந்து வாங்கிப் போக சொன்னார் !

சுமார் பத்து கிலோ மீட்டர் தேசிய  நெடுஞ்சாலையில்
பயணித்து ஒரு வழியாய் அவரிடமிருந்து சான்று ( Previous Certificate ) வாங்கி வந்தேன் !
அங்கேயும் வழக்கமான அரசு அலுவலகங்களில் இருப்பதை போன்றே அவருக்கு கீழ் பணியாற்றிய ' கர்ண ' ங்கள் சான்று கேட்டு வரும் மாணவர்களிடம் ' சில ' அமவுன்ட்டுகளை எதிர்பார்த்திருந்தனர் .
அவர்களிடம் ஒன்றும் சிக்காமல் போகவே , அவர்களில் ஒன்று சிடு சிடுப்புடன் கையெழுத்து போட்டு விட்டு ,
ஒண்ணும் தேறாது போலிருக்கு ' என்று தனக்குத்தானே ஜோக் அடித்து பக்கத்தில் இருந்த ஊழியரிடம் மெலிதாக சிரித்துக் கொண்டது !

( எப்படியும் ஒரு நபருக்கு கிராமமென்றால் ஐந்து பத்து , முனிசிபாலிட்டி என்றால் பத்து இருபது ! இதில் நான் முன்னெப்போதோ பார்த்த ' ஒன்று '  டாக்டர் பீஸ் வாங்குவதைப் போன்று ' பக்கத்து ஜன்னல்ல இருக்கிறவர் கிட்ட இருவது ரூவா கொடுத்திட்டு போ ' என்று ஒவ்வொருவரிடமும் கொஞ்சம் கூட கூச்சப் படாமல் சொல்வது சாதாரணமாய் காண முடியும் ! )
.

அரை பசியில் மீண்டும் வந்து  எங்க ஊரு கர்ண ( கொடூர ) த்திடம்
கொடுத்தேன் !
R I யே கையெழுத்திட்டு சான்று கொடுத்து விட்டதால் திரு திரு வென அச்சான்றையே எழுத்து கூட்டி படிப்பது போல் சில நிமிடம் வாசித்தது !
( அதை எழுதிய அந்த கிளேர்க் அக்கா எடுத்துக் கொண்ட நேரத்தைவிட ' இது ' அக்கடிதத்தை படித்தது மூன்று மடங்கு நேரம் அதிகம் ! )
படித்து முடித்ததும்,
திடீரென்று ஒரு குண்டை தூக்கி போட்டது ' பிற்படுத்த பட்டோர் ல இருக்கீங்க , இந்த ஊர்ல இந்த சாதியே லிஸ்ட்ல கிடையாது , நீங்க படிச்சது வேற ஸ்டேட்ல என்கிறதினால போட்டிருக்காங்க ! இந்த இது முற்படுத்தப் பட்டோர் ல வருது !  அதனால ........ '

( இடைமறித்தேன் ! )

சார் ........ கோவில்ல கொடுத்த சான்றை பாருங்க !!!!

( பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள் , சான்றிதழ் கொடுக்கும் போது எங்க R I என்ன நினைத்தாரோ தெரியவில்லை மறுபடியும் என்னிடமிருந்து வாங்கி ,
என் மதத்தின் பெயரையும் சேர்த்து எழுதினார் ! அதனால் தான் அது வாயை திறக்க வில்லை ! )

எனக்கு என்னைக்கு ஒரு வேலை சரியா முடிஞ்சிருக்கு ,
ஒரு பரதேசி அவருக்கு அருகே சேரை இழுத்து போட்டு உட்கார்ந்துக் கொண்டு நாட்டாமை பண்ணியது

' இதெல்லாம் கொடுக்காதீங்க சார் ! அந்த ஊர்லே போயி வாங்கிக்க 
சொல்லுங்க ! '

ஒரு முறை முறைத்தேன் !
வன்முறை எப்படி மனிதனுக்குள் கரு கொள்கிறது என்பதை அப்போது தான் தெரிந்துக் கொண்டேன் !
ஒருத்தன் கஷ்டப்பட்டு பல கிலோமீட்டர் போயி Certificate வாங்கி வருவாராம் , இவரு பேனுக்கு கீழ ' ஹாயா ' சேரை போட்டு உக்காந்து நாட்டாமை பண்ணுவாராம் !!!

அந்த ' ஒண்ணுமே தெரியாததுக்கு ' என்ன தொணுச்சோ தெரியாது ,
உடனே நீ போய்ட்டு நாளைக்கு காலைல  வா , பார்க்கலாம் என்றது !

சரி நடக்கிறது நடக்கட்டும் என்றபடி வீட்டிற்கு வந்தேன் !

ஒரு நாள் இருக்குது எல்லாருக்கும் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும்
உதிர்த்துவிட்டு சம்மணமிட்டு அமர்ந்த சில நேரத்தில்
செய்தி வந்தது ,

' வீட்டை தேடி ரெண்டு பேரு வரானுங்க ' ன்னு !!!

எட்டி தெருவுல போயி பார்த்தா எங்கம்மா கிட்ட ஒரு உருவம் ' அவரு இருக்காரா ' ன்னு கேட்டுகிட்டு இருந்துச்சு !


' யாரா இவங்க ? ' இது அம்மா !

' ஆஹா .... இவனுங்கதாம்மா அவனுங்க ' ன்னு  சட்டைய போட்டுக்கிட்டு வருவதுக்குள்ள
வாசற்படியில் நின்று எங்கம்மாவை சிபிஐ லெவலுக்கு ' அது ' விசாரித்துக் கொண்டிருந்தது !!!
அவன்  கேட்டகேள்விக்கு நாங்கள் சொன்ன பதிலை விட ,
அவன் கேட்டதை படியுங்கள் . .
ஊமையா இருந்தாலும் கோவம் வருமா வராதா ? ?

  • ' உங்க பையன் ஏன் அங்க போயி படிச்சான் ?! '
  • ' உங்க மாமனாரு இந்த ஊர் தான்னா அவரோட சான்றேல்லாம்
    எங்க ?!
    '
( டேய் எங்க தாத்தா பேரை சொன்னாலே தெரியும்டா , அவரு செத்து இருவத்தைஞ்சு வருஷம் மேல ஆகுது !!! )
  • ' இந்த ரேஷன் கார்ட்ல இருக்கிற நபர எங்க ? ' 
அம்மா : அவரு இறந்துட்டாரு
  • ' எந்த ஊர்ல ? '
அம்மா : கடலூர்
  • ' ஏன் அங்க இறந்தாரு ? ' ( இதைக் கூட ஒரு வகையில் விசாரணைன்னு ஒத்துக்கலாம் அடுத்த கேள்விய பாருங்க ! )
  • ' ஏன் கடலூர்ல இறந்த சான்றிதழ் வாங்கியிருக்கீங்க ? '
( அந்த நாயை எதால அடிச்சா அறிவு வரும் ? , எந்த ஊர்ல இறக்கிறாங்களோ
அந்த ஊரு முனிசிபாலிடி ஆபிஸ் தான் சர்ட்டிபிக்கட் தரும் , இது தெரியாம இது எப்படி ஆபிசர் ஆச்சுன்னே தெரியல ! )
  •  ' குடியிருப்பு சான்று இல்லாம எப்படி காலேஜ் சேர்ந்தீங்க ? '
( டேய் டுபாக்கூர் , ஆயிரத்தெட்டு பார்மாலிட்டிகளை சில எளிய என்கொயரிகள் மூலமா தாண்டி பாஸ்போர்ட் , விசா- வெல்லாம்  வாங்கியிருக்கேன்டா ! காலேஜ் ல சேர்க்க மாட்டாங்களா ? )

Pk : காலேஜ் ல மத்த சர்டிபிகேட்களை காட்டி சேர்ந்தேன் !!!

அது : தம்பி நானும் காலேஜ் படிச்சிருக்கேன் !
( நெசமாவா ?! )

அப்போ ...... அது ஒண்ணு சொல்லுச்சு !

அதாவது அதுவே வேற ஊர்ல இருந்து இங்க வந்து தான் ஆபிசர் ஆச்சாம் ! அதுக்கு எல்லா பார்மாலிட்டியெல்லாம் தெரியுமாம் !
(  வேற ஊர்ல இருந்து இங்க வந்து ஒண்டின நாயெல்லாம் என்ன கேள்வி கேக்குது , சுமார் நூறு வருஷமா இந்த ஊர்ல இருக்கிற  என் குடும்பம் நான் வேற ஸ்டேட்ல படிச்சதால ' நாடோடி ' ன்னு சொல்ல முடியுமா ?!  )



இறுதியா ........

  • நீங்க வேற மாநிலத்துல படிச்சதால தான் தம்பி இவ்வளவு
    என்கொயரி !
( அவனுங்க யோக்கிய சிகாமணிகள் என்று நாங்க நினைச்சுக்கனுமாம் !!! )

தலையாட்டினேன் .......

அவனுங்கள  வழியனுப்பரப்போ ஒரு அமவுன்ட்டும் கொடுத்து பார்த்தேன் ,
ஐயையோ வேணாம்னு நீதி நேர்மைகட்டுப்பாடு ன்னு ஓடிப் போச்சுங்க !!

உண்மைய சொல்லணும்னா நான் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க போனா கூட எங்க ஏரியாவில பாதி பேருக்கு தெரிஞ்சிடும் .
இல்ல,
' CASINO.' ன்னு நான் பேரு வெச்ச,
எங்க ' OUT POST ' மாதிரி இருக்கிற கடைக்கு தெரிஞ்சிடும் !
இவனுங்க  வந்து கேள்விகளை வாந்தி எடுத்துட்டு போனதுக்கு பின்னாடி ஐஸ் வாட்டர் வாங்க கடைக்கு போனப்போ அண்ணாச்சி சொன்னார் ,

' உங்க வீட்டுக்கு ரெண்டு பேரு வந்திருப்பானுகளே ? '

தலையாட்டினேன் ...

' இங்க தாம்பா வந்து கலர் சாப்டானுங்க  அப்பவே பசங்க கிட்ட உனக்கு போன் பண்ண சொன்னேன் , நீ தான் எடுக்கவேயில்ல !!! '

 அவர்கள் என் வீட்டிற்கு வந்த பத்து நிமிடம் கழித்து நண்பனிடமிருந்த வந்த அழைப்பின் காரணத்தை புரிந்துக்கொண்டேன் !

' இதோ பாருப்பா ... அவனுங்க காசு எதிர் பாக்கிறானுங்க . நூறு இருநூறு போனா போச்சுன்னு கொடுத்துட்டு வேலைய முடி ! இல்லாட்டி இத மாதிரி மோசமா அலைய விடுவானுங்க ! வேணும்னா நாளைக்கு நானும் கூட வரவா ? '

' காசு கொடுத்தும் வாங்கலை ' என்றேன்

' நீதாம்பா பக்குவமா கொடுக்கணும் ! '

நாளைக்கு பாப்போம்னே .. இல்லாட்டி வேற மாதிரி டீல் பண்ணனும் !
மனம் வெறுத்து வீட்டிற்கு திரும்பினேன் !

இதுல பல விஷயம் எனக்கு புரியல ,
  • மத்திய அரசாங்கம் பலவித விசாரணை , ஆய்வுக்கு பிறகு கொடுக்கும் பாஸ்போர்ட் எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம் இல்லை எதுக்காக கொடுத்தாங்கன்னே தெரியாமே இருக்கும் இந்த ஆபிசர என்ன பண்றது ???!
  • வேற ஊருக்கு வந்து ரேஷன் கார்டு வாங்கி ஐந்து வருடம் ஆகிறது !
    ஓட்டும் போட்டாச்சு , வோட்டர் ஐடி நகலையும் காட்டியாச்சு !
    இதற்கு பின்பும் முன்னாடியிருந்த ஊர்ல போயி
    லெட்டர் வாங்கிட்டு
    வா ன்னு எந்த மடைப் பையன் சொல்லுவான் ???
  • எத வெச்சு முன்னாடி இருந்த ஊர்ல இருக்கிற ' கர்ணம் ' எனக்கு சர்ட்டிபிக்கட் கொடுப்பாரு ??!
    என்னை ஊர்ல பார்த்ததே இல்லைன்னு தான சொல்லுவாரு இல்ல ஊர்ல இருக்கும் கால அளவை அப்பப்போ அரசாங்க பதிவேட்டில் ஏற்ற வழி முறை இருக்கா ???  இல்ல நான் என்ன
    சோழ குலோத்துங்கன்னா , இந்த வருடம் வரை அரசர்  இந்த ஊர்ல இருந்தாரு  , அந்த ஊர்ல இருந்தாருன்னு கல்வெட்டுல பொறித்து வைக்க ?
    எப்படியும் குத்து மதிப்பா தான் கொடுக்க முடியும் ! என்ன மாதிரி எளிதா சான்று வாங்க எல்லா மக்களும் அந்தந்த ஊரு கர்ணம் வீட்ட சுத்தி குடியிருக்க முடியுமா ???!! இல்ல தினமும் ' நாந்தான் ஐயா குப்புசாமி , உங்க வீட்டுக்கு பின்னாடி வீடுன்னு ' அட்டெண்டன்ஸ் போட்டுட்டு இருக்க முடியுமா ?!
  • நீ ஏன் அந்த ஊர்ல போயி படிச்ச ? ன்னு திரும்ப திரும்ப கேட்கும் அந்த ஞான சூனியத்தை என்னேன்னு சொல்றது ??!
  • அவரு ஏன் அந்த ஊர்ல இறந்தாருன்னு கேட்கும் அந்த _____  ஐ என்ன செய்யலாம் ??!

அது இப்படி நிறைய கேட்டுச்சு சில விஷயங்கள டென்ஷன்ல மறந்துட்டேன் , நியாபகம் வந்ததும் சொல்றேன் !

நாளைக்கு தான் தெரியும் மீதி கச்சேரி !!!

இதற்கிடையே விஏஓ க்களிடம் பல தடவை சர்டிபிக்கேட் வாங்கிய நண்பனிடம் அனுபவத்தை கேட்டேன் ......

( போனில் )

- மச்சி ... ரொம்ப ரூல்ஸ் பேசறான் ... நாளைக்கு உங்க எம்எல்ஏ மாமா ட்ட சொல்லி எனக்கு விஏஓ கிட்ட RESIDENCE CERTIFICATE வாங்கி தர சொல்லுடா !!!!
.
- யு மீன் ' RESIDENT EVIL ? '

#கழுத வயசாகியும் CARTOON NETWORK பார்க்கிற பசங்கள கூட வச்சிருக்கிறது தப்பா போச்சே !!! :(

CONCLUSION :

ஆயிரம், ரெண்டாயிரம் வாங்கும் அரசு அலுவலர்களை கப் கப் பென்று பிடிக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசே !!!
ஒரு நாளைக்கு கவர் ல அமவுண்ட் வாங்கி கல்லா கட்டும் ரேஞ்சுக்கு வியாபாரம் பண்ணிக்கொண்டிருக்கும் இந்த ' நவீன கால கர்ண பிரபுக்களை ' எப்போ கண்டுக்குவீங்க ??! 



( பி கு : நீங்கள் எவ்வளவு தான் பெரிய அப்பாடக்கராய் இருந்தாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியா C M கிட்ட போயி CERTIFICATE வாங்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும் ! )

இப்படிக்கு ,
பிசாசு குட்டி ( எ ) Pk

2 comments:

  1. கலர்புல் பிசாசு குட்டிக்கு வணக்கம்...
    உங்கள் பதிவு நகைசுவையுடன் கூடியசிந்தனைக்குரியது வரவேற்கிறேன்...

    சாதியை உதிரம் ஊற்றி வளர்த்து ,இதற்கு வழி தெரிந்த , வழி வகுத்த அனைத்து நல் உள்ளங்களையும் குழி தோண்டி புதைத்து விட்டோம்...இருந்தாலும் அவ்வபோது சாதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருந்தாலும் , இன்னும் அதற்கான பயணம் முடிவாகவில்லை..

    உங்களின் நோக்கமும் எண்ணப்பதிவுகளும் உங்கள் வலைப்பூ ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்...

    வாழ்த்துகளும் நன்றிகளும் பி கே..

    வாழ்க வளர்க..

    சாயமயமான எழுத்துக்களும் , பின்னுருவமும் அருமையான தேர்வு...

    நான் உற்பட வலைப்பூ தொடங்குகிறவர்கள் அதை தொடர்ச்சியாக பராமரிப்பு செய்வது மிக மிக கடினம்..புதுசா புதுசா விசயங்களை நாம் தரவிருக்கம் செய்யாது போனாலும் பரவாயில்லை..இருக்கின்ற வரப்போகின்ற விசயங்களை முன்னெடுத்து பயன்பாட்டில் வைத்து இருப்பதை கடமையாக கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் பி கே ..

    ReplyDelete
  2. Romba Romba DANKS :)))))))))) Nichchayam

    ReplyDelete

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.