Apr 10, 2011

எலெக்ஷன் , டென்ஷன் ( டமில் பதிவு ! )


( புதுச்சேரி . . . பாலத்திற்கருகே இருக்கும் ஒயின் ஷாப்பிற்கு வெளியில் நடைபெற்ற நீரா ராடியா உரையாடலை விட சுவாரசியமான உரையாடல் ! )


உருவம் 1 : மச்சி . . . 
உருவம் 2 : என்னடா....??!
உருவம் 1 : அவன் ஜெய்ச்சுடுவானாடா ??!
உருவம் 2 :  எவன்டா ??!
உருவம் 1 : அவன்தான்
உருவம் 2 : எவன்டா ??!
உருவம் 1 : நம்ப தொகுதில அண்ணனுக்கு ஆப்போசிட்டா நிக்கிறானே  அவன்தான் !!!
உருவம் 2 : தெர்லயேடா . . .
உருவம் 1 : டாய்........ சரக்கு வாங்கும்போது அண்ணன் ஜெயிச்சுடுவாருன்ன !!
உருவம் 2 : விடு மச்சி . . . ஜெய்ச்சாலும் ஜெய்க்கலாம்....
உருவம் 1 :  ( பளார் ! ) 
உருவம் 3 :  ( அப்போதுதான் என்ட்ரி ! ) டேய்...நிறுத்து... நிறுத்து... ஏன்டா அவன
அடிச்ச ?!

உருவம் 1 : பின்ன என்னடா . . . அண்ணன் ஓட்டுக்கு கொடுத்த காசிலயே சரக்கு அடிச்சிட்டு , அவரப் பத்தியே தப்பா சொல்றான்டா ?! 
உருவம் 3 : சரி விடு.... தெரியாம சொல்லிருப்பான். ஏன்டா ****. இப்போ என்னான்ற ??!
உருவம் 2 : ( சத்தமில்லை ! )
உருவம் 1 : நீ விடு மச்சி..... நான் கேக்குறேன் ...!!!
இப்போ சொல்லு . . . யாரு ஜெய்ப்பா....??!
உருவம் 2 : ( சத்தமில்லை ! )
உருவம் 1 : சரி கோவிச்சுக்காதடா ... ஏதோ அண்ணன் மேல இருக்கிற பாசத்தில அடிச்சிட்டேன் . ஆம் சொரி !!!
உருவம் 2 : ( அழுதவாறே ) ம்ம்ம்....
உருவம் 1 : சேர்ர்ரா .... அதான் மன்னிப்பு கேட்டுட்டேன் ல . இப்போ சொல்லு , யாரு ஜெய்ப்பானு ?!
உருவம் 2 : (  கன்னத்தை தடவுவியவாறே, முக மலர்ச்சியுடன் ! ) தெரிலியே மச்சி..... ஒரு குவார்ட்டர் சொல்லேன்...!!!!
உருவம் 1: அடிங்..........!!!
( அடுத்த ரவுண்டுக்காக இரண்டாம் உருவத்தை துரத்திக் கொண்டு முதல் உருவம் பாருக்குள் ஓடுகிறது !! )


நாம் பெட்டிக் கடையில் வாங்க வந்த பாலோடு பாலத்தை கடந்தோம் . . . !

No comments:

Post a Comment

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.