Apr 13, 2011

நாங்களும் ' பாலிடிக்ஸ் ' பேசுவோம் : கவுண்டர் அட்டாக் !!!

ஹையா....... கலெக்சன் இல்லாத எலெக்சன் முடியப்போகுது !!!
இனி எல்லாரையும் ஜாலியா கலாய்க்கலாம் . . . 


உபயம் :













Apr 12, 2011

எந்தக் கட்சி , நம்பக் கட்சி !


" எனக்கு "
எம்.ஜி.ஆர் என்றால் உயிர். ஆனால்.... அதிமுக காரனில்லை ,
பெரியார் மிக பிடிக்கும் . ஆனால்.... தி.க (நல்லவேலை !) விலில்லை ,
தமிழ் பிடிக்கும் திமுக காரனில்லை ,
தமிழனைப் பிடிக்கும் நாம் தமிழர் கட்சியிலில்லை ,
தொழிலாளர்களுக்காக உழைக்க பிடிக்கும் கம்யூனிஸ்டில்லை ,
காமராசரை பிடிக்கும் காங்கிரஸ்காரனில்லை ( என்ன புண்ணியம் பண்ணியிருந்தேனோ ! ) ,
வைகோவை பிடிக்கும் மதிமுக அனுதாபி இல்லை . . . !!!
பின்ன யார்தான் நான் ?!?!
யாரை பின்பற்றி வருகிறேன் ?!
குழப்பங்களுக்கிடையே பெயரற்ற உருவம் வந்து கேட்டது ,
" சரி . . . நீ ஜானி ஆளா... சதா ஆளா ?! "
" அப்பா... நான் மனுஷாள்டா எப்பா !!! ஆள விடுங்க !!  "

Apr 10, 2011

எலெக்ஷன் , டென்ஷன் ( டமில் பதிவு ! )


( புதுச்சேரி . . . பாலத்திற்கருகே இருக்கும் ஒயின் ஷாப்பிற்கு வெளியில் நடைபெற்ற நீரா ராடியா உரையாடலை விட சுவாரசியமான உரையாடல் ! )


உருவம் 1 : மச்சி . . . 
உருவம் 2 : என்னடா....??!
உருவம் 1 : அவன் ஜெய்ச்சுடுவானாடா ??!
உருவம் 2 :  எவன்டா ??!
உருவம் 1 : அவன்தான்
உருவம் 2 : எவன்டா ??!
உருவம் 1 : நம்ப தொகுதில அண்ணனுக்கு ஆப்போசிட்டா நிக்கிறானே  அவன்தான் !!!
உருவம் 2 : தெர்லயேடா . . .
உருவம் 1 : டாய்........ சரக்கு வாங்கும்போது அண்ணன் ஜெயிச்சுடுவாருன்ன !!
உருவம் 2 : விடு மச்சி . . . ஜெய்ச்சாலும் ஜெய்க்கலாம்....
உருவம் 1 :  ( பளார் ! ) 
உருவம் 3 :  ( அப்போதுதான் என்ட்ரி ! ) டேய்...நிறுத்து... நிறுத்து... ஏன்டா அவன
அடிச்ச ?!

உருவம் 1 : பின்ன என்னடா . . . அண்ணன் ஓட்டுக்கு கொடுத்த காசிலயே சரக்கு அடிச்சிட்டு , அவரப் பத்தியே தப்பா சொல்றான்டா ?! 
உருவம் 3 : சரி விடு.... தெரியாம சொல்லிருப்பான். ஏன்டா ****. இப்போ என்னான்ற ??!
உருவம் 2 : ( சத்தமில்லை ! )
உருவம் 1 : நீ விடு மச்சி..... நான் கேக்குறேன் ...!!!
இப்போ சொல்லு . . . யாரு ஜெய்ப்பா....??!
உருவம் 2 : ( சத்தமில்லை ! )
உருவம் 1 : சரி கோவிச்சுக்காதடா ... ஏதோ அண்ணன் மேல இருக்கிற பாசத்தில அடிச்சிட்டேன் . ஆம் சொரி !!!
உருவம் 2 : ( அழுதவாறே ) ம்ம்ம்....
உருவம் 1 : சேர்ர்ரா .... அதான் மன்னிப்பு கேட்டுட்டேன் ல . இப்போ சொல்லு , யாரு ஜெய்ப்பானு ?!
உருவம் 2 : (  கன்னத்தை தடவுவியவாறே, முக மலர்ச்சியுடன் ! ) தெரிலியே மச்சி..... ஒரு குவார்ட்டர் சொல்லேன்...!!!!
உருவம் 1: அடிங்..........!!!
( அடுத்த ரவுண்டுக்காக இரண்டாம் உருவத்தை துரத்திக் கொண்டு முதல் உருவம் பாருக்குள் ஓடுகிறது !! )


நாம் பெட்டிக் கடையில் வாங்க வந்த பாலோடு பாலத்தை கடந்தோம் . . . !

Apr 5, 2011

மலிங்கா . . .


                                         மலிங்கா ஆட்டோ சர்வீஸ் . . .

படம் சொல்லும் சேதி . . .



இன்னும்  வளரணும் தம்பி !!!