Dec 26, 2011

யூ டியூப் : தங்க பதக்கங்கள் ( கோல்டன் அவார்ட் )

மது காணொளி கோப்புகளை கொண்டுள்ள தளங்களில் சிறப்பானதான ' யூ டியூப் ' வலைத்தளம் , தன்னிடம் பதிவேற்றப்படும் காணொளிகளை தற்போதைய நடப்பு , இந்த வார நிகழ்ச்சிகள் மற்றும் எப்பொழுதும் புகழுடன் இருக்கும் காணொளிகள் என தரவரிசைப்படி ' கௌரவிக்கும் ' முறையை செயல்படுத்தியுள்ளது. இதை எளிதில் அடையாளம் காணும் வசதிக்காக ' தங்கம் , வெள்ளி  மற்றும் வெண்கல பதக்கங்களாக '  வழங்கி வருகிறது .





எப்போதும் பிரபலமான காணொளி வரிசை பதக்கம்

அதிகபட்ச பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து வரிசைப்படுத்தப்படுகிறது .


முதல்  பத்து காணொளிகளுக்கு ' தங்க  ' பதக்கம் வழங்கப்படுகிறது . 
இதில் ' ஜஸ்டின் பைபரின் - பேபி ' பாடல் வழமைப் போல் முதலிடத்தை பெற்றுள்ளது .
இந்த தர வரிசையில் ' சார்லி பைட் மை பிங்கர் ' என்னும் ஒரே ஒரு காணொளி மட்டுமே இசை காணொளி அல்லாதது ஆகும் .










மிக அண்மையில் பிரபலமான காணொளி பதக்கம் ,

கடந்த ஏழு நாட்களில் அதிகபட்ச பார்வைகளையும் , விருப்பங்களையும் கொண்டதன் அடிப்படையில் அளிக்கப்படுகிறது .







கால நடப்பினையோட்டிய காணொளி பதக்கம்



திமிங்கலத்தில் அருகே சென்றுவிட்ட  நீர் சறுக்கு விளையாடியவர் நபரின் காணொளி இதில் ஒன்றாகும் 









இதில் சில காணொளிகள் எல்லா தரவரிசைகளிலும் இடம்பெற்றுள்ளது .

உதாரணத்திற்கு , ' பார்ட்டி ராக் ஆந்தம்



தங்க பதக்கத்தில் நம்ப ஊரு ' கொலைவெறி ' பாடலும் அடக்கமென்பது புதிய விடயமாகும் . ( பெருமைக்குரியதா என்பதை நீங்களே தீர்மானியுங்கள் ! )

http://www.getcinemas.com/images-news/youtube-awards-gold-medal-to-dhanushs-kolaveri-song.jpg


இந்த வரிசைப்படுத்தி பதக்கம் வழங்கும் முறை தொடரும் என அறியப்படுகிறது .  நிச்சயம் இது குறும்பட படைப்பாளிகளுக்கு சிறந்த ஊக்கத்தை தரும் என எதிர்பார்க்கலாம் !!!


என்றும் அம்புடன் ,
பிச்சு ... குட்டி ...

Oct 30, 2011

ஆண்களின் ஆளுமை : பெண்களின் ஆளுமை

செய்திதாட்களில் வருவதைப் போல ' கதை ' சொன்னால் அதன் உண்மையான கருத்து புரியாமல் போகலாம் என்பதால் , இப்படி துவக்குகிறேன் . . .

இதை கதையாக படித்தாலும் சரி , ஒரு செய்தியாக படித்தாலும் சரி , முடிவு வாசகருடையதே . எப்போதோ நடைப்பெற்ற ஒரு சம்பவம் . இப்படி நடந்தால் நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள் ! ஆளை தேடி  உங்கள் நேரத்தை விரயமாக்கி கொள்ள வேண்டாம் .


Oct 12, 2011

இவர்களைப் பற்றியும் தெரிஞ்சுக்கோங்க...



இவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்...

  
இடமிருந்து வலம் : க. வீரப்பன்  நா . மாரிச்சாமி , ச. ஆறுமுகம் சி . நாகராஜ் . 
இவர்களை பற்றி சில விடயங்களை பகிர நான் கடமை பட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் அண்மையில் கோயம்பேட்டில் நடந்த உண்ணா நிலை போராட்டத்தில் பங்கேற்றனர் என்பது நமக்கு தெரிந்தாலும் தெரியாத சில விடயங்களும் உண்டு . அப்படி என்ன சாதனை செய்து விட்டார்கள் இவர்கள்? என்ன சிறப்பு இவர்களிடம் இருக்கிறது ? இவர்கள் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் என்பதை தவிர இவர்களை பற்றி சிறப்பாக கூற என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இவர்களை பற்றி சொல்ல மறந்த கதை ஒன்றும் இருக்கிறது .

Oct 9, 2011

காதல யாரும் தேடி போக முடியாது.. அதுவா நடக்கணும். . .

காதல யாரும் தேடி போக முடியாது..
அதுவா நடக்கணும். நம்பள போட்டு தாக்கணும்.
தலைகீழா போட்டு திருப்பணும் .. அதான் true love ...

இங்கே சொடுக்குங்கள் ...


 விரைவில் . . . . !!!


Oct 3, 2011

இவரைப் பத்தி நிச்சயம் தெரிஞ்சுக்கோங்க !

மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் எப்படிப்பட்டவர் ?


‘‘மதுரை கலெக்டர் சகாயம், அதிமுக-வினர் போல் செயல்படுகிறார். அவர் தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று பேசும் அளவிற்கு சென்றுள்ளார் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.’’

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை மாவட்ட ஆட்சியர் குறித்து அளித்துள்ள பத்திரிகை செய்தி இது. இதே சகாயம் குறித்து டெக்கான் கிரானிக்கில் மற்றும் ஆனந்த விகடன் ஆகிய இதழ்கள் அளித்துள்ள விவரங்கள் என்ன?

‘‘என்னை கோயம்புத்தூருக்கு மாற்றியிருந்த நேரம். என் பெண் யாழினிக்கு அப்போது மூன்று வயது. திடீரென்று ஒருநாளிரவு அவள் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டாள். மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றேன். உடனே மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லிவிட்டார்கள். மாதக் கடைசி என்பதால் கையில் ஆயிரம் ரூபாய் கூட இல்லை. புதிய ஊர். அறிமுகம் இல்லாத மனிதர்கள். எனக்குக் கீழே வேலை பார்க்கிறவர்களிடம் கடன் கேட்கவும் சங்கடமாக இருந்தது. காஞ்சிபுரத்தில் நான் வேலை பார்த்தபோது எனக்கு நண்பராக இருந்த ஒரு பள்ளி ஆசிரியர் அப்போது கோவைக்கு மாற்றல் ஆகி வந்திருந்தார். அவரிடம் மிகவும் தயக்கத்துடன் நான்காயிரம் ரூபாய் கடன் கேட்கவும் ஓர் அரை மணி நேரத்தில் அவர் கொண்டு வந்து கொடுத்தார். உடனே குழந்தைக்கு சிகிச்சை ஆரம்பிச்சிட்டோம். ஆனால், சம்பளம் வாங்கியதும் அந்தக் கடனை அடைத்ததும்தான் என் மனமதில் இருந்த சுமை இறங்கியது.’’

சகாயம், ஐஏஎஸ். நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்ஐசி ஹவுசிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு. வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு என பகிரங்கமாகத் தனது சொத்துப்பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். ’லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ வாசகத்துக்குக் கீழ் தலைநிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

‘‘நான் அந்த கோயம்பத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன் என்றால்,அப்போது என் கட்டுப்பாட்டில் 650 மதுபானக் கடைகள் இருந்தன. உரிமம் புதுப்பிக்க கடைக்குத் தலா பத்தாயிரம் ரூபாய் என்று கொடுக்கத் தயாராய் இருந்தார்கள். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அடுத்த ஐந்தாவது நிமிடம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய் கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில், மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசித்துப் பாருங்கள். ஆனால், அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்கிறதில் ஒரேயொரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரித்துக்கொண்டே போவார்கள். அவர்களை மட்டும் சமாளித்துவிட்டால் போதும். — தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் சொந்த ஊர். மற்றவர்கள் தோட்டத்து மாங்காய் தெருவில் கிடந்தால்கூட எடுத்துக்கொண்டு வரக்கூடாது என்று சொல்கிற அம்மா. நீ படித்து கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா என்று சொல்லிக்கொண்டே இருக்கும் அப்பா. கலெக்டர்தானே, ஆயிடுவோம்னு படிச்சேன், ஆயிட்டேன். வேலைக்கு சேர்ந்த முதல் நாள் நம்ம மனது எந்த அளவுக்கு புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ, கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணினேன்.

‘‘காஞ்சிபுரத்தில் கோட்டாட்சியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெரியவர், தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப்படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். மாதிரியை ஆய்வுக்கூடத்திற்கு சோதனைக்காக அனுப்பியதில், மனிதர்கள் குடிக்க இலாயக்கற்ற பானம் என்று அறிக்கை வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல் என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஓர் அறிக்கை தயாரித்தேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு வட்டாட்சியரிடம் எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேலாளரிடம் கொடுத்துட்டு, கம்பெனியைப் பூட்டி சீல் வைக்கப் போறோம். எல்லோரையும் வெளியே வரச் சொல்லுங்கன்னு சொன்னோம். அந்த மேலாளரைவிட என்கூட வந்த வட்டாட்சியர் ஆடிப்போயிட்டார். சார், ...பெரிய பிரச்சனை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்னு பதறினார். கலெக்டரைக் கேட்டால் சீல் வைக்க விடமாட்டார். சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்கன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழித்து இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவர், சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். முதல்வர் கிட்ட பேசுறதாச் சொல்றாங்க, சார். என்ன பண்ணலாம்னு கேட்டார். உள்ளே இருக்கிறவங்களை கைது பண்ணிட்டு சீல் வைக்க வேண்டியதுதான்னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி எட்டு பூட்டுகளையும் போட்டு சீல் வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாமல், ஒரு குக்கிராமத்துக்குப் போய் ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு செய்துவிட்டு இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசலிலேயே காத்துக்கொண்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரடரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்குப் போன் பண்ணி இருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போண் பண்ணினேன். யாரைக் கேட்டு சீல் வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க, தெரியுமா? என்று எல்லோரும் கேள்வி கேட்டாங்க. நான் என் கடமையைத்தான் சார் செய்தேன். மக்களுக்கு நல்லது செய்ததுக்காக, சஸ்பெண்ட் செய்தால் தாராளமாகச் செய்துகொள்ளுங்கள் என்று சொல்விட்டேன். மறு நாள் இந்த செய்தி எந்தப் பத்திரிகையிலும் பெட்டி செய்தியாகக் கூட வரவில்லை. பெப்சிக்கு சீல் வைத்த சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை,.

இரண்டு நாள் கழித்து ஜூனியர் விகடன் இதழில் மட்டும் அந்தச் செய்தி விரிவாக வந்திருந்தது,. அதற்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல் வைத்த விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிந்தது.


" இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாற்றி மாற்றி பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலாக நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டுவிட்டோம். அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணிவிட்டோம். இன்னும் பத்தாண்டுகளில் அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வான்னு ஒவ்வொரு மாதமும் கலெக்டர் ஆபிசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பித்தேன். ஒரு நாள் இரவு முழுதும் அந்தந்த கிராமங்களிலேயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்போதுதான் அவங்க சொல்வதற்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாம் உணர முடியும். "

இப்படிப்பட்ட சகாயம் மீதுதான் அமைச்சர் மு.க.அழகிரி குற்றம்சாட்டுகிறார்.

Sep 26, 2011

அட டாக்டர்களா . . .

' முற்பகல் நேரம் ' ( பொதிகை சேனல்ல அப்படித் தான் சொல்லுவாங்க ! )
' அரசாங்க ஆஸ்பத்திரி ' க்கு போவதென்றால் , 
சில மணி நேரம் செயற்குழு கூட்டி மன்மோகன்ஜி 2G யைப் பற்றி சிந்திப்பது போல நாட்கணக்கில் யோசிப்பது வழக்கம் ...!

நேத்து  ரொம்ப நேரமா பேஸ்புக்கியதால் சாப்பிடவும் மறந்து , பின்னிரவில் வெள்ளைக்காரன் ரேஞ்சுக்கு ( பிரெட் ) கோதுமை ரொட்டியில் ( பிரெஞ்ச் சீஸ் ) பிரெஞ்சு பாலாடைக்கட்டியை ( பிடிச்சது பழைய சோறுங்கிறது வேற விஷயம் ) பரப்பி விட்டு சத்தம்போடாமல் குப்புற படுத்தாயிற்று !


குளிர் காற்று திடீரென்று வாட்டியதால் கைகளை கட்டிக்கொண்டு ( வாத்தியாரை பார்த்ததும் இஸ்கூல்ல கைகட்டுவமே அதே ஸ்டைலில் ) மீண்டும் குப்புற படுத்துவிட்டேன் ) .

இது தான் ' வினை ' .


Aug 26, 2011

இதயம் இருப்பவர்கள் மட்டும் இதனை முயற்சி செய்யவும் !!!

அன்பு  உறவுகளே ,
அன்னா ஹசரே '  ஊடக மாயை விட்டு வெளியே வாருங்கள் !!!!
உண்மையான மனித நேயத்தை காட்டுங்கள் !!!!

மறுக்கப்பட்ட நீதியால் செப்டம்பர் ஒன்பதாம் தேதி  தூக்கு மேடை ஏறவிருக்கும் முருகன் , சாந்தன் , பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை நிறுத்தக் கோரி உங்களால் ஆன முயற்சியினை செய்யுங்கள் !!!

- குறைந்த பட்சம் குறுஞ்செய்தியாவது உங்கள் கைப்பேசியில் உள்ள அனைத்து நண்பர்கள் , உறவினர்களுக்கு மாந்த நேயப் பார்வையில் அனுப்புங்கள் . மரண தண்டனைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே எழுச்சியின் தோய்வுக்கு காரணம் !!!!

- உங்கள் பகுதியில் எங்கு மரண தண்டனைக்கெதிரான ஆலோசனைக் கூட்டம், கண்டனப் போராட்டம் நடைபெறுகிறது என தெரிந்துக் கொண்டு உங்கள் நண்பர்களையும் பங்கேற்க
கூறுங்கள் !!!!

- கட்சி , இயக்க பாகுபாடின்றி பங்கேற்று, உங்களால் ஆன மேலான பங்களிப்பை அளியுங்கள் !!!

- உங்களை சுற்றியுள்ள சமூகம்  ,  சுற்றுப்புறம் , மேல்தட்டு மக்களை நினைத்து போராட தயங்குவீர்களேயானால் , குறைந்தது மறைமுகமாகவாவது போராடுபவர்களுக்கு துணிச்சலைக் கொடுங்கள் !!!!! தேவையான உதவிகளை செய்யுங்கள் !!!!!

- உங்கள் அருகிலுள்ள  வாய்ப்புகளை அறிந்துக் கொண்டு அவற்றை திறம்பட பயன்படுத்தி செயல்படுத்துங்கள் .

- புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் , தங்கள் தொடர்பிலுள்ள மரண தண்டனை எதிர்ப்பு இயக்கங்கள் , மனித உரிமை அமைப்புகளை தொடர்புக் கொண்டு இதைப் பற்றி பேச முயலுங்கள் !!!
அருகிலுள்ள இந்திய தூதரகங்களை தொடர்புக் கொண்டு உங்கள் எதிர்ப்பினை பதிவு செய்யுங்கள் !!!
இந்தியா என்னும் ' ஜனநாயக விரோத ' நாட்டில் இருந்துகொண்டு போராட முடியாத எங்களை விட , உங்களால் சிறப்பாக செயல் பட முடியும் என்பதால் உங்கள் உதவியினை நாடுகின்றோம்  !!!

- ராசீவ் கொலையாளிகள் என்னும் தவறான கண்ணோட்டத்தை அகற்றி உண்மையை உணர வையுங்கள் !!!

- கும்பல் கும்பல்களாக அப்பாவி மக்களை சுட்டுக் கொண்ட அஜ்மல் கசாப் பாதுகாப்பாக நீதிக்காக காத்திருக்கும் தேசம் இது !!!

- திருட்டு, கொலை , ஏமாற்றுதல் ஆகியவற்றால் சிறை செல்வதை விட எவ்வளவோ மேலானது
மூன்று உயிர்களுக்காக சிறை செல்வது !!!

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் காணொளி :
http://www.youtube.com/watch?v=SX5w78u45vA )

இது சம்பந்தமாக ஏதேனும் உதவியோ , குறிப்புகளோ உங்களுக்கு தேவைப்படின் ,
எந்நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் !!!
விழ விழ , எழுவோம் !!!!!

~     ' ஜே JaY ReBorN '


Aug 6, 2011

மாமா , மச்சான்


நட்புக்கு கூட கற்புகள் உண்டு
நல்லா தெரிஞ்சுக்கடா!
ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...
அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!


விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க இல்ல
'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!


'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்...
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!
கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!


ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!
பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!
அம்மா ஆசையா போட்ட செயினும்,
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ...
சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!
படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

Jul 14, 2011

இருபது ரூவா நோட்டு : சில நவீன கால ' கர்ண ' பிரபுக்களின் கதை !!!

அதிகாலை எட்டு மணி . . . (  யூத் டிஷ்னரில அப்படித்தான் இருக்கு ! )
அலாரம் ஒழுங்கா அடிக்குதா ன்னு டெஸ்ட் பண்ண சீக்கிரமே எழுந்து
வெயிட் பண்ணி டயர்ட் ஆகி தூங்கிய என்னை
ஒன்பது மணிக்கு அலாரமே எழுப்பியது !!!
.
அம்மா எங்க இருக்காங்கன்னு ' சாட்டிலைட் ' வெச்சு தேடாத குறையாக
தேடி கண்டுப்பிடித்தேன் ....  அவங்க  கண்களில் அகப்படாமல் தலைமறைவாக !
 .

' சிட்டி ' ரோபோ  வேகத்தில் , அதிரடியாய் சத்தமில்லாமல் கிளம்பி , வெகு நேரமாய் கப்போர்டை துழாவிக் கொண்டிருந்தேன் ( இல்லை இல்லை கிளறிக் கொண்டிருந்தேன் ! )
.
' இதையா தேடுற ' ......... திடீரென்று வந்த குரல் கேட்டு திரும்பினால் ,
தேடிக்கொண்டிருந்த டாக்குமெண்டுகளின் ' நகல்களோடு ' அம்மா !!!
வடிவேலு மாதிரி ' நா அப்படியே ஷாக் ஆகிட்டேன் !!!!! '
.
ஏன்னா .......
காலேஜ் சேர , அப்ளிகேஷன் வாங்கின நேரத்திலிருந்து வீட்டுக்கு தெரியாம எப்படியாவது  சீட் வாங்கியாகணும் என்று முழுக்க முழுக்க கவனமாக நடைபெற்றுக் கொண்டிருந்த   சீக்ரெட் ஆப்பரேஷன் !!!!
சிங்கிள் செகண்டில் புஸ் ஆனது !!!
.
 சரி என்ன செய்ய ..... ' ஹி ஹி ஹி ... காலேஜுக்கு ' என்று லைட்டா ஒரு இளிப்போடு வீட்டிலிருந்து ' எஸ் 'ஆனேன் !!

.
மணி  : 9:17 AM - அவசர அவசரமாக ' VAO ' OFFICE என்றழைக்கப்படும் ' கிராம நிர்வாக அலுவலகத்திற்கு போனேன் !!!
என்ன அருமையான ' நிர்வாகம் ' !
ஒன்பதரை வரை பூட்டியே கிடந்தது !!!!
.
ரசினி பட முதல் நாள் ஷோ மாதிரி ' கர்ணம் ' என்றழைக்கப்படும் விஏஓ வந்ததும் மக்கள் ஏழெட்டு பேர் உள்நுழைந்தனர் !
என் முறை வரும் வரை வரிசையிலேயே பல நிமிடம் காத்திருக்க வேண்டியதாய் போயிற்று !!!
எனக்கு முன்னாடி சென்ற பலரில் நான்கைந்து பேருக்கு அந்த சான்றிதழ் இல்லை , இந்த ஆவணம் இல்லை என்று திருப்பி அனுப்பினார் அந்த ' STRICT OFFICER '.
பார்ரா ........ அரசாங்க நிர்வாகம் அருமையா நடக்குது என்று மூக்கின் மேல் விரல் வைக்கப் போகும் அளவிற்கு வியந்த என் எண்ணத்தில் அரை லோடு மண் அள்ளிப் போட்டார் அந்த ' ஆஆஆபிசர் ! '
.
அவர் கேட்ட கேள்விகளுக்கு பின்னர் அவரை ஏன் ' சார் ' என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது ...
.
அந்த டுபாக்கூர் கேட்டது ,
  • ' எல்லா ஆவணமும் இருக்கா ?! '
Pk : இருக்கு சார் ! பாஸ்போர்ட் , ரேஷன் கார்டு , வோட்டர் ஐடி , முதற் கொண்டு இருக்கு இருப்பிடத்திற்கான சான்று !
( அதிகபட்ச ஆவணமான ' பாஸ்போர்ட் ' இருந்தாலே இருப்பிட சான்று கிடைத்து  விடும் என்ற எளிதான வழி இருப்பதால் ' அது ' அடுத்ததிற்கு தாவியது ! )
.

Jul 3, 2011

தனிமையில் ஓர் பின்னிரவுப் பொழுது . . .

ஊசியாய்
ஏறிடும்
மிக மெல்லிய போதை,
மழை  ஊறி
சுவாசம் சில்லிடும் 
குளிர் இரவு  ,
பேரமைதி  நிரம்பிய  சாலையில்
மாநகரத்து  ராஜாவாய்
தன்னந்தனியே  வீறிட்டு பயணிக்கும்
வாகனம் ,
நிறைவான 
இன்பம் யாதென
இதயம் உணரும் வேளையில் ,
பூத கணங்களின்
வரவேற்பாய்
எதிரே
மாநகர காவல் வாகனம் !!~
~ Pk

Jun 30, 2011

யாரந்த அப்பாடக்கர் ????











எவ்வளோ அப்பாடக்கர்ஸ் இருந்தாலும் யாருக்கும் சரியான அர்த்தம் தெரியாது !

கவலைய விடுங்க.....

கண்ணீர துடைங்க ....

i will explain...


' அப்பாடக்கர் ' என்றால் என்ன?


இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ்.

மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர்.
வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லப்பட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது.
அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது.
அப்பாடக்கர் ஸ்கூலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :)


( நன்றி : தோழர்.ரோஜாராமன் ! )

கட்டிங்,ஒட்டிங்அன்ட் எடிட்டிங் : உங்கள் ' பிசாசுக்குட்டி ' .
[ யாருப்பா அது விசிலடிக்கிறது.... எனக்கு விசிலடிச்சா பிடிக்காதுன்னு தெரியும்ல ! ]

May 14, 2011

இது வடிவேலு ஸ்பெஷல் - 2












 ஹிஹி ..... இது நான்தான் !!!  விசயகாந்தும் அவிங்க பசங்களும் என்ன போட்டி போட்டு தேடறதா  பயலுக சொன்னாங்க... அதான் கெட்டப்ப மாத்திகிட்டு கேக்கறான் மேக்கறான் கம்பெனி ல ' ரிசப்ஷனிஸ்ட் ' வேலைக்கு போயிட்டிருக்கேன்..... வரண்ணே !!!






வடிவு  :  அண்ணே...அண்ணே...... அம்மா வந்துட்டாங்க ... காப்பாத்து ..... காப்பாத்து !!!!
ரசினி :    பயப்படாத முருகேஷா... டிவி ல நியூஸ் தான் ஓடிட்டிருக்கு !!!!





வடிவு :
என்ன எப்படியாச்சும் அவிங்ககிட்ட இருந்து காப்பாதிடுண்ணே... இனி உன் பக்கம் தல வெச்சு கூட படுக்க மாட்டேன் !!!
' ரானா ' வாழ்க.... ' ரஜினி 'வாழ்க .... அவிங்க வீட்டு ' வாட்ச்மேன்  ' வாழ்க.... பேப்பர் போடற பையன் வாழ்க !!!




தேர்தலுக்கு முன் :


இன்னிக்கு நாம எப்படி அண்ணன் விசயகாந்த நம்மோடைய ' ட்ரங்கன் மங்கி ' ஸ்டைல் மூலமா ' பேஸ் ' பண்ணப் போறோம்னு பார்க்க போறோம் !!!




                           



தேர்தலுக்கு பின் :









MORAL :

' பிளான் ' பண்ணாம பண்ணா இப்படித்தான் , எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் !!!

May 13, 2011

இது வடிவேலு ஸ்பெஷல் !!


 ரஜினி : இனிமே ரஜினி எங்க இருக்கார்னு கேட்டா
என்ன சொல்லுவ ?
வடிவு : -ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கார்னு சொல்லிடுவேன்...
ரஜினி : அது !!!!




 * பார்த்தி : வாடா... அழகிரி அண்ணன் கூப்பிடறாரு !!!
* வடிவேலு :  ஊஹீம்....... வந்தா அடிப்ப.....
* பார்த்தி :  வராட்டியும் அடிப்பேன் !!!!! @#$%

 


 ~ ஐயையோ மூத்திர சந்துக்கு தூக்கிட்டு போறானுங்களே ! ~




 வாழ்க்கைனா சில அடிகள் விழத்தான் செய்யும் !




 என்னது அம்மா ' லீடிங் ' ஆ ?!?!  ஊர விட்டு எஸ்கேப் ஆயிடனுமா ?!?!




 ~ இப்படியே பொடி நடையா லண்டன் பக்கம் ஓடிட வேண்டியதுதான் ! ~




 ஐயா...... இந்தாங்க நீங்க கூவ சொல்லி கொடுத்த அமவுன்ட்டு . 
ஆள விடுங்க சாமி.......தூக்கிட்டு போக ஆட்டோ வருது ~!



 ~ ஆணிய புடுங்க வேணாம் ~

 



சும்மா சிக்கினாலே , சட்ட கிழியற வரைக்கும் அடிப்பாங்க ,
இப்போ மெஜாரிட்டி வேற ,
மெரிச்சே கொன்னுடுவாங்களே !!!!!!




 ஹிஹிஹி....... அண்ணன் வாழ்க !!!






~ நா விளையாட்டா பேசப்போயி நீங்க சீரியஸா எடுத்துக்கிட்டீங்க .. ஹையோ.... ஹையோ.... ~

தேர்தல் தமாசு : கருணாஸ் ஸ்பெஷல்






                                                                 வட போச்சே !!!


              
                                      என் சோக கதைய கேளு தாய்க்குலமே . . . !!!

அதற்கான காணொளி :




May 9, 2011

என்ன கொடுமை சரவணன் இது ?!?!


பின்லேடன்  கடலுக்கடியில் புதைக்கப்பட்டதற்கான ஆதாரம்
                                          ( Proof of Dead Osama...buried @ sea. )

May 1, 2011

' தல ' டே . . .

வணக்கம் . . . 
இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் ஒன்றை மட்டும் மரியாதையாக கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் ~ !!!
" இன்னிக்கு என்ன டே தெரியுமாங்கடா டே ?! "
' அல்டிமேட் ஸ்டார் ' பெர்த்டே ....
சோ.... சில நறுக்குகள் உங்கள் பார்வைக்கு !!!!


 

PROOF :

as far as i knw..... am watching him since LAST two TN Elections Standing & VOTING in Queue !